ⓘ Free online encyclopedia. Did you know? page 10




                                               

கல்லா மண்ணா

கல்லா மண்ணா தமிழக நாட்டுப்புறங்களில் சிறுவர் சிறுமியரால் விளையாடப்படும் விளையாட்டு. அண்மைக் காலத்தில் மறைந்துவரும் விளையாட்டுகளில் ஒன்று. பட்டவர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். அவர் தொடவேண்டும். பட்டவர் கல் என்று சொன்னால் கல்லில் நிற்பவரை மட்டுமே ...

                                               

கல்லுக் கொடுத்தான் கல்லே வா

கல்லுக் கொடுத்தான் கல்லே வா என்னும் விளையாட்டு தமிழகத்தில் நாட்டுப்புறச் சிறுவர் சிறுமியர் ஆடிய குழு விளையாட்டுகளில் ஒன்று. அண்மைக் காலமாக இது மறைந்துவருகிறது.

                                               

கல்லுக்குச்சி

எல்லாச் சிறுவரும் தம் கையில் ஒரு முழ நீளத்துக்குக் குறையாத ஒரே அளவுள்ள ஒரு குச்சி வைத்திருப்பர். ஒருவர் குனிந்து தம் கைக்கு எட்டும் தூரத்தில் தன்னைச் சுற்றி ஒரு வட்டம் போடுவார். அந்த வட்டம் அனைவருக்கும் உத்தி இடமாகப் பயன்படுத்தப்படும். அந்த வட்டத ...

                                               

காக்கா கம்பு

இது கல்லுக்குச்சி விளையாட்டைப் போன்றது. ஆனால் குச்சியின் நீளம் அவரவர் உயரம் இருக்கும். எல்லாருடைய கையிலும் குச்சி இருக்கும். ஏதோ ஒரு வகையில் பட்டவர் தீர்மானிக்கப்படுவார். பட்டவர் தன் இரண்டு கைகளாலும் தன் குச்சியை உயர்த்திப் பிடிப்பார். இது காக்கை ...

                                               

காக்கா குஞ்சு (விளையாட்டு)

பட்டவர் தேர்ந்தெடுக்கப்படுவார். எளிதாக ஏறக்கூடிய மரம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதன் அடிமரத்தைச் சுற்றி ஒரு வட்டம் போடுவர். எல்லாரும் மரத்தில் ஏறிக்கொள்வர். பட்டவர் குச்சி ஒன்றை அந்த வட்டத்துக்குள் வைத்துவிட்டு மரத்தில் ஏறி ஒருவரைத் தொடவேண்டும். தொட ...

                                               

காயா பழமா

அழுது அடம் பிடிக்கும் குழந்தையிடம் தாய் காயா பழமா என்று கேட்டு, பழம் என்று சொல்ல வைத்து அழுகையை நிறுத்துவாள். சிறுவர் சிறுமியர் பகைமை கொள்பவரிடம் இவ்வாறு கேட்டு நண்பராக்கிக் கொள்வர். ஆள்காட்டி விரலை நடுவிரலால் பின்புறமாக வளைத்து இடைவெளி உண்டாகுமா ...

                                               

கார்த்திகைச் சுளுந்து

கார்த்திகைச் சுளுந்து சிறுவர் விழாக்கால விளையாட்டு. கார்த்திகை மாதம் கார்த்திகைத் திருநாளன்று நடைபெறும். அண்மைக்காலமாக இந்த விளையாட்டு அருகிவருகிறது. கார்த்திகைத் திருநாளில் மகளிர் விளக்குகள் பல ஏற்றி வானத்து விண்மீன்கள் போல ஊரெங்கும் ஒளிரச் செய் ...

                                               

கால் தூக்கிற கணக்கப்பிள்ளை

கால் தூக்கிற கணக்கப்பிள்ளை சிறுவர் விளையாட்டுகளில் ஒன்று. திளைப்புக்காக விளையாடப்படுவது. தமிழக நாட்டுப்புறங்களில் இது பரவலாக விளையாடப்படும். இக்காலத்தில் அருகிவருகிறது. நான்கு சிறுவர். இருவர் கைகோத்துக்கொள்வர். ஒருவரது வலக்கையும் மற்றொருவரது இடக் ...

                                               

கிச்சுக் கிச்சுத் தம்பலம்

கிச்சுக் கிச்சுத் தம்பலம் என்பது சிறுவர், சிறுமியர் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று. சில வேளையில் பெரியவர்களும் சிறுவர்களோடு சேர்ந்துகொள்வர். இதனை ஈழத்தமிழர் குச்சாட்டம் எனவும் வழங்குவர். சிறு மணல் கரையில் துரும்பை மறைத்துக் கண்டுபிடிக்கச் செய்ய ...

                                               

கிய்யா கிய்யா குருவி

கிய்யா கிய்யா குருவி என்பது சிறுவர் சிறுமியர் விளையாட்டுகளில் ஒன்று. தொடக்கப் பள்ளிகளிலும் இது விளையாடப்படும். பிறருக்கு உதவி செய்யவேண்டும் என்னும் நீதியைப் புகட்டும் நடிப்பு விளையாட்டு இது. புதரில் சிக்குண்டு பறந்து வரும்போது சிறகு ஒடிந்த குருவி ...

                                               

கிளி செத்துப்போச்சு

கிளி செத்துப்போச்சு ஒரு உல்லாச விளையாட்டு. நாட்டுப்புறங்களில் சிறுமியர் விளையாடுவர். 1950-க்குப் பின்னர் இதுபோன்ற விளையாட்டுகள் மறைந்துவருகின்றன. சிறுமியர் சிலர் இரு கால்களையும் நீட்டிக்கொண்டு வட்டமாக உட்காருவர்." அக்கக்கா கிளி செத்துப்போச்சு” – ...

                                               

குச்சி விளையாட்டு

குச்சி விளையாட்டு என்பது எல்லா வயதினரும் விளையாடும் கைத்திறன் விளையாட்டு. விரல் நடுக்கம் இன்மையையும், பொறுமையையும் வெளிப்படுத்தும் விளையாட்டு. விளக்குமாற்றில் உள்ள சீவங்குச்சிகள் சுமார் நான்கு அங்குல அளவுக்கு உட்பட்டனவாக ஒரே அளவில் 10 குச்சிகளும் ...

                                               

குச்சிக்கல்

ஒரு சதுரமும் அதற்குள் ஒரு வட்டமும் போடுவர். வட்டத்துக்குள் 4 கற்கள் வைத்திருப்பர். 5 பேர் விளையாடுவர். விளையாடுவோர் எல்லாரும் சுமார் ஐந்தடி நீளமுள்ள குச்சி ஒன்று வைத்திருப்பர். ஏதோ ஒரு முறையைப் பின்பற்றிப் பட்டவர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ப ...

                                               

குஞ்சு விளையாட்டு

குஞ்சு விளையாட்டு, நாட்டுப்புறங்களில் சிறுவர் சிறுமியர் ஆடும் விளையாட்டுகளில் ஒன்று. இது ஓடித்தொடும் விளையாட்டு. ஒரு அணி கோழிக்குஞ்சு. மற்றொரு அணி பருந்து. பருந்து கோழிக்குஞ்சைப் பிடிக்கவேண்டும். ஒரு வட்டம் வரையப்பட்டிருக்கும். அது குஞ்சு பதுங்கு ...

                                               

குதிரைக் கல்லு

குதிரைக் கல்லு ஒரு சிறுவர் விளையாட்டு. ஒருவகையில் இது குதிரைச் சில்லி விளையாட்டு போன்றது. குதிரைச் சில்லி இருவர் ஆடும் விளையாட்டு. குதிரைக் கல்லு இரண்டு அணியினர் விளையாடும் விளையாட்டு. குதிக்காலால் திருகி ஒரு சிறிய குழி செய்து அதனை உத்திக் குழி எ ...

                                               

குதிரைச் சில்லி

குதிரைச் சில்லி என்பது இரண்டு சிறுவர் விளையாடும் ஒர் குறிவிளையாட்டு. இரண்டு பேரில் ஒருவர் குதிரை. மற்றொருவர் சவாரி செய்பவர். ஒவ்வொருவர் கையிலும் ஒரு சில்லி இருக்கும். குதிரையாக இருப்பவர் தன்னிடமுள்ள சில்லியை எறிவார். சவாரி செய்பவரைப் பார்த்து "நீ ...

                                               

குலையா குலையா முந்திரிக்காய்

குலையா குலையா முந்திரிக்காய் அல்லது குலை குலையா முந்திரிக்கா என்னும் விளையாட்டு சிறுவர் சிறுமியர் கூடி விளையாடும் திளைப்பு விளையாட்டு. இதனை ஆனைத்திரி, திரி திரி பந்தம் என்றும் பாடப்படும் பாடலுக்கேற்பப் பெயரிட்டு வழங்குவர். விளையாடுவோர் அனைவரும் வ ...

                                               

குறிஞ்சி வஞ்சி

ஒரு வட்டம் போடுவர். பட்டவர் அதில் தன் கண்களைத் தானே தன் கைகளால் மூடிக்கொண்டு நிற்பார். நிகழும் உரையாடல் வரலாமா பொத்திக்கொண்டிருப்பவர் வரக்கூடாது மற்றவர் திரும்பத் திரும்பப் பலமுறை எல்லாரும் ஒளிந்துகொண்டபின் வரலாமா பொத்திக்கொண்டிருப்பவர் வரலாம் மற ...

                                               

கொப்பரை கொப்பரை

கொப்பரை கொப்பரை என்பது உன்னிப்போடு கூடிய ஒரு உத்தித்திற விளையாட்டு. சிறுவர் சிறுமியர் வட்டமாக உட்காருவர். அவரவர் தொடையில் தட்டிக்கொண்டு முன்பாட்டும் பின்பாட்டுமாகப் பாடுவர் பாட்டு: ஆடு, மாடு, மான், எருமை ஆகியவற்றைக் கொம்புள்ள விலங்காகத் தொகுத்துக ...

                                               

சங்கிலி விளையாட்டு

சங்கிலி விளையாட்டு என்பது சங்கிலி போல் கை கோத்துக்கொண்டு நின்று சிறுவர் சிறுமியர் விளையாடும் விளையாட்டு ஆகும். சிறுவர் சிறுமியர் சேர்ந்து கைகளைக் கோத்துக்கொண்டு சங்கிலி வட்டம் அமைப்பர். வேறு இருவரும் உள்ளனர். இவர்களில் ஒருவர் வேங்கைப்புலி. மற்றொர ...

                                               

சீச்சாங்கல்

சீச்சாங்கல் நாட்டுப்புறத் தெருக்களில் சிறுவர் சிறுமியர் விளையாடும் ஒருவகை விளையாட்டு. இது ஒரு குறி விளையாட்டு. விளையாடுவோர் ஒவ்வொருவருக்கும் 10 புளியங்கொட்டைகள். பொது புளியங்கொட்டைகள் புளிய முத்துகள் கொஞ்சம். பொது-முத்திலிருந்து எடுத்து மூன்றின் ...

                                               

சீத்தடி குஞ்சு

சீத்தடி குஞ்சு என்பது சிறுவர் விளையாட்டு. இது இருட்டில் விளையாடப்படும். இது மற்றவரின் ஒலித்திறன் காணும் உத்தி விளையாட்டு. ஒருவர் மறைவில் சீழ்க்கை அடிப்பதைக் கேட்டு அந்த ஒலி யாருடையது எனக் கண்டுபிடிப்பது இந்த விளையாட்டு. சீழ்க்கை அடி என்பது சீத்தட ...

                                               

சீப்பு விற்கிறது

சீப்பு விற்கிறது என்னும் விளையாட்டு சிறுவர் சிறுமியரால் விளையாடப்படும். ஒளிதல், கண்டுபிடித்தல் என்கிற முறையில் இது விளையாடப்படும். ஒளியவேண்டியவர் கடைக்குச் சென்றுவருகிறேன் என்று சொல்லிவிட்டுக் மற்றவர் கண்ணிலிருந்து மறையும் இடத்துக்குச் சென்றுவருவ ...

                                               

சுண்டு முத்து

சுண்டு முத்து என்பது சிறுமியர் ஆடும் விளையாட்டு. இது சிறுமியரின் கைத்திற விளையாட்டு. இருவர் சம எண்ணிக்கையில் புளியங்கொட்டைகள் வைத்துக்கொள்வர். அவற்றை முத்துகள் என்பர்; ஆள் மாறி மாறி விளையாடுவர். ஒருவர் தம்மிடமுள்ள முத்துகளில் கொஞ்சம் அள்ளித் தரைய ...

                                               

சூ விளையாட்டு

சூ விளையாட்டு நாட்டுப்புறச் சிறுவர் ஆடும் விளையாட்டு. தற்காலத்தில் விதிமுறைகளுடன் ஆசிய அளவில் போட்டி விளையாட்டாக நடைபெறும் போட்டி விளையாட்டு கோ-கோ போன்றது இது. கோ-கோ விளையாட்டில் அணிக்கு 9 பேர் என இரண்டு அணிகள் விளையாடும். ஒரு அணியிலுள்ள 8 பேரும் ...

                                               

சோத்துப்பானை

சோத்துப்பானை என்பது சிறுமியர் நடிப்பு-விளையாட்டு. சோற்றுப்பானை என்பது இப்படி வழக்குச் சொல்லாக மருவியுள்ளது. விளையாடுவோர் உட்கார்ந்திருப்பர். இருவர் சொல்லிக்கொண்டே நடிப்பர்; சோறாக்கும் செயல் நடித்துக் காட்டப்படும். நெல் குத்துதல், புடைத்தல், அரிசி ...

                                               

தட்டாங்கல் ஆட்டம்

தட்டாங்கல் ஆட்டம் ஒரே மாதிரியான உருண்டையான சிறு கூழாங்கற்களைக் கொண்டு பெரும்பாலும் சிறுமியர் விளையாடும் விளையாட்டு. இது பாண்டிக்கல் என்றும் அழைக்கப்படும். சங்ககாலத்தில் இதன் பெயர் தெற்றி. இவ்விளையாட்டு வெவ்வேறு ஊர்களில், வெவ்வேறு எண்ணிக்கையுள்ள க ...

                                               

தந்தி போவுது தபால் போவுது

தந்தி போவுது தபால் போவுது எனும் இந்த விளையாட்டைச் சிறுவர் சிறுமியர் வட்டமாக உட்கார்ந்து ஆடுவர். ஒருவர் பட்டவர். அவருக்குத் தெரியாமல் ஒரு மணியாங்கல் வட்டத்தில் உள்ளவரிடையே கைமாறும். ஒருவர் கையில் கல் தங்கிவிட்டாலும், அவர் அடுத்தவரிடம் கல்லைக் கொடு ...

                                               

தவளை விளையாட்டு

தவளை விளையாட்டு சிறுவர் விளையாட்டுகளில் ஒன்று. தவளையினைப் போல தாவித் தாவி செல்லுதலை இவ் விளையாட்டில் ஆடுமுறையாகக் கொண்டதால் தவளை விளையாட்டாக அழைக்கப்படுகிறது. கையினை கால்களுக்கு இடையே கையினையூன்றித் தாவித்தாவி நகர்தல் வேண்டும். பட்டவர் தொடுவற்காக ...

                                               

துரத்திப் பிடி

துரத்திப் பிடி எனும் விளையாட்டை இதனைச் சிறுவர் சிறுமியர் ஆகிய இருவரும் தனித்தனிக் குழுவாகவும், சேர்ந்து விளையாடும் குழுவாகவும் இருந்துகொண்டு விளையாடுவர். சிறுவர் கால் கவட்டைக்குள் கையை விட்டு மூக்கைப் பிடித்துக்கொண்டு நின்றால் தொடக்கூடாது. சிறுமி ...

                                               

தூண் விளையாட்டு

தூண் விளையாட்டு சிறுவர் சிறுமியர் தொட்டு விளையாடும் விளையாட்டு. இதை தூண்பிடிச்சு என்றும் கூறுவர். தூணைத் தொட்டுக்கொண்டு நிற்பவரைத் தொடக்கூடாது என வைத்துக்கொண்டு விளையாடுவர். நான்கு தூண்களில் நான்கு பேர் நிற்பர். அவர்களில் ஒருவர் பட்டவராகித் தொடுவ ...

                                               

தெல்லுருட்டான் விளையாட்டு

அக்டோபர், நவம்பர் மாதங்களில் தெல்லுக்காய்கள் மிகுதியாகக் கிடைக்கும்.விளையாடும் சிறுவர்கள் அனைவரும் தெல்லுக்காய்களை வைத்துக்கொள்வர். முதலில் ஆடுபவர் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தெல்லுக்காய்களை நிலத்தில் வைப்பார். மற்றவர்கள் அதே எண்ணிக்கையில் தெல்லுக ...

                                               

நடிப்பு விளையாட்டு

நடித்துக்கொண்டே பாடுவதும், உரையாடல்கள் நிகழ்த்துவதும் நடிப்பு விளையாட்டு. இதனை சிறுவர்களும் சிறுமியரும் விளையாடுவர். சிறுமியர் தண்ணீர் சேந்துகிறது பாடல் தண்ணீர் சேந்தி, தண்ணீர் சேந்தி, குடத்திலே ஊற்று பூப் பறித்து, பூப் பறித்து கூடையிலே போடு பூ வ ...

                                               

நாலுமூலைக் கல்

விளையாடுவோர் எல்லாரும் தெருப்புழுதியில் வரிசையாகக் காலால் தேய்த்துப் படத்தில் உள்ளது போல் விளையாடும் கட்ட அரங்கு அமைப்பர். மொத்தம் ஐந்து பேர் விளையாடுவர். அரங்கின் மையத்தில் 4 கல் வைக்கப்படும். ஒருவர் பட்டவராகத் தெரிந்தெடுக்கப்படுவார். அவர் கல்லை ...

                                               

நிலாக் குப்பல்

தெருவில் மண்குவியல் வைத்து உப்பு என்பர். இரண்டு அணியினர் இருவேறு பக்கம் சென்று சிபல உப்பு வைப்பர். பின் உத்தி இடத்தில் மீண்டும் கூடுவர். திசைமாறிச் சென்று எதிர் அணியினர் வைத்த உப்புக் குவியல்களை அழிப்பர். < அழிக்கும்போது பின்வரும் பாட்டுப் பாட ...

                                               

நெல்லிக்காய் (பாடித் தொடுதல்)

விளையாடுவோரின் எண்ணிக்கையில் ஒன்று குறைந்த எண்ணிக்கையில் பற்றவேண்டிய பந்தற்கால் அவ்வப்போது தீர்மானிக்கப்படும். பந்தற்காலைப் பிடித்துக்கொண்டால் தொடக்கூடாது என்பது விளையாட்டு விதி. நெல்லிக்காய் என வழங்கப்படும் இந்த விளையாட்டு பாடித் தொடும் விளையாட் ...

                                               

பச்சைக் குதிரை

பச்சைக் குதிரை ஒரு சிறுவர் விளையாட்டு. வாலிபர்களும் ஒத்த பருவத்தினரோடு இதனை விளையாடுவது உண்டு. பெரும்பாலும் இது நிலா வெளிச்சத்தில் நடைபெறும். இந்த விளையாட்டின் முதல் படி பிறருடைய காலைத் தாண்டுவதில் தொடங்கும். அதனால் இந்த விளையாட்டுக்குக் கால்தாண் ...

                                               

பஞ்சு வெட்டும் கம்போடா

நூல் நூற்பவர்கள் பஞ்சை ஒருவகை வில்லால் அடித்து விதைகளையும், வேண்டாத தூசிகளையும் நீக்கித் துய்மை செய்வர். இவ்வாறு தூய்மை செய்ய உதவும் வில்-கருவிக்குக் கம்போடா என்று பெயர். சிறுவர்கள் ஆற்றுமணலில் குழி பறித்து அதில் ஒருவரைக் குப்புறப் படுக்கவைத்துத் ...

                                               

பாவப்பட்ட பூனை

பாவப்பட்ட பூனை என்பது குழந்தைகளால் விளையாடப்படும் விளையாட்டு ஆகும். இந்த விளையாட்டு அனைவரையும் சிரிக்கவைக்கும் விளையாட்டுஆகும். சிறப்பு விருந்தினர்கள் அறையின் உள்ளே அமர்ந்திருப்பார்கள். ஒருவரைத் தேர்ந்தெடுத்து பூனை போல ஒவ்வொருவரை மூன்று முறை சுத் ...

                                               

பிள்ளையார் பந்து

சுவர் ஓரமாக ஒரு செங்கல் நிறுத்தப்படும். செங்கல் எவ்வளவு நீளம் இருக்கிறதோ அவ்வளவு நீளம் சுவரிலிருந்து தள்ளி அந்தச் செங்கல் நிறுத்தப்படும். அந்தச் செங்கல்தான் பிள்ளையார். உத்திக் கோட்டில் நின்று துணிப்பந்தால் பிள்ளையாரை வீழ்த்த வேண்டும். இதுதான் வி ...

                                               

பூசனிக்காய் விளையாட்டு

ஆட்டக்காரர்களில் ஒருவர் அரசன்; மற்றொருவர் அரசனின் சேவகன். மற்றவர்கள் படர்ந்திருக்கும் பூசனிக்கொடி. அரசன் பூசனிக்காய் வாங்கிவரச் சொல்வான். சேவகன் கொடியில் காய்த்திருக்கும் பூசனிக்காயைப் பறிப்பான். இதுதான் விளையாட்டு. பூசனி வேராக இருக்கும் சிறுமி த ...

                                               

பூப்பறிக்க வருகிறோம்

இரண்டு அணிகள் இருக்கும். அவற்றுக்கிடையே ஒரு கோடு வரையப்பட்டிருக்கும். ஒவ்வொரு அணியிலிருந்தும் ஒருவர் அந்த நடுக்கோட்டுக்கு அருகில் வருவர். அவர்கள் அடுத்தவரைத் தம் பக்கம் இழுப்பர். யார் நடுக்கோட்டைத் தாண்டி இழுக்கப்படுகிறாரோ அவர் இழுக்கப்பட்ட பக்கம ...

                                               

பொய்க்கால் நடை

பொய்க்கால் நடை சிறுவர் விளையாட்டுகளில் ஒன்று. தரையில் கால் ஊன்றாமல் கொட்டாங்குச்சியின் மேல் ஏறி நடப்பது இந்த விளையாட்டு. தேங்காய் உடைத்து அதனுள் இருக்கும் தேங்காய்ப் பருப்பை எடுத்துக்கொண்ட பின்னர் எஞ்சியிருக்கும் தேங்காய் ஓடு கொட்டாங்குச்சி எனப்ப ...

                                               

மத்தாடு

மத்தாடு என்பது சிறுமியர் ஆடும் விளையாட்டுகளில் ஒன்று. தயிர் கடையும்போது மத்து வலப்புறமும் இடப்புறமும் சுழலும். பருப்புக் கடையும்போதும், கீரைக் கடையும்போதும் மத்து சட்டிக்குள் வட்டமிடும். இப்படி மத்து சுழல்வது போலச் சுழன்றாடுவது மத்தாடு விளையாட்டு ...

                                               

மதிலொட்டி

மதிலொட்டி சிறுவர் விளையாட்டுகளில் ஒன்று. இது உல்லாச விளையாட்டு. இதில் வெற்றியோ தோல்வியோ இல்லை. இந்த வேடிக்கை விளையாட்டை சிறுவர்கள் விளையாடும்போது பெரியவர்கள் விரும்பிப் பார்த்து மகிழ்வர்.

                                               

மந்தி ஓட்டம்

மந்தி ஓட்டம் சிறுவர் விளையாட்டுகளில் ஒன்று. மந்திக் குரங்கால் முழங்காலை நேராக நிமிர்த்த முடியாது. சிறுவர் தம் கால்களை நிமிர்த்த முடியாதவாறு பிணைத்துக்கொண்டு ஓடுவது மந்தி ஓட்டம். முதலில் நாக்குந்தலாகக் குந்தித் தம் இரு கைகளையும் தம் இரு கால்களுக்க ...

                                               

மாது மாது

கெட்டியான தரையில் ஒரு வட்டம் வரையப்படும். அந்த வட்டத்தில் 10 குழிகளும் வட்டத்தின் நடுவில் 4 குழிகளும் உருவாக்கப்படும். பட்டவரின் கண்கள் பொத்தப்படும். முன்பே பட்டவருக்குக் காட்டப்பட்ட புளியங்கொட்டை போன்றதொரு அடையாளப் பொருளை மற்றொருவர் ஒரு குழியில் ...

                                               

மெழுகுத்திருட்டு (விளையாட்டு)

மெழுகுத்திருட்டு என்பது கார்த்திகை அன்று தமிழகத்தின் தென்காசி நகரில் சிறுவர்களால் விளையாடப்படும் விளையாட்டாகும். கார்த்திகை இரவன்று அந்தந்த இடங்களிலுள்ள சிறுவர்கள் கூட்டணி அமைத்து வீட்டின் முன் வாசலில் வைக்கப்பட்டிருக்கும் மெழுகுவர்த்திகளை திருடி ...

                                               

ராசா மந்திரி

ராசா மந்திரி சிறுவர்கள் விளையாடும் விளையாட்டு. இதை குறைந்தது நான்கு பேர் விளையாடுவர். எத்தனை பேர் விளையாடுகிறார்களோ அத்தனை துண்டுச்சீட்டுகள் எடுத்துக்கொள்வர். அவற்றில் 3 சீட்டுகளில் மட்டும் பெயர் எழுதப்பட்டிருக்கும். ராசா, மந்திரி, கள்ளன் - என்பன ...

                                               

ரானா மூனா தண்டட்டி

சிறுமியர் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று ரானா மூனா தண்டட்டி. இது ஒருவரை கேலி செய்யும் விளையாட்டு. தண்டட்டி என்னும் சொல் தாலியைக்காரை என்னும் அணிகலனைக் குறிக்கும்.