ⓘ Free online encyclopedia. Did you know? page 137




                                               

ஜிப்ரால்ட்டர் நீரிணை

ஜிப்ரால்ட்டர் நீரிணை, மத்தியதரைக் கடலையும், அட்லாண்டிக் பெருங்கடலையும் இணைக்கும் நீரிணையாகும். மத்தியதரைக் கடற் பகுதியில், ஆவியாதல் வீதம், அதனுள் விழும் ஆறுகளினால் ஏற்படும் மொத்த நீர்வரத்தைவிட அதிகமாக இருப்பதன் காரணமாக, நீரிணையில் கிழக்கு நோக்கிய ...

                                               

ஸ்காகெராக்

ஸ்காகெராக் என்பது ஒரு நீரிணை ஆகும். இது நோர்வேயின் தென்கிழக்கு கடற்கரை, சுவீடனின் மேற்கு கடற்கரை மற்றும் டென்மார்க்கின் ஜட்லாண்ட் தீபகற்பம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள ஒரு நீரிணை ஆகும். இது வடகடல் மற்றும் கட்டேகாட் நீர்சந்தி ஆகியவற்றை இணைத்து, பால்ட ...

                                               

சாந்த் பௌரி

சந்த் பெளரி என்ற பெயருடைய 3.500 படிக்கட்டுகள் கொண்ட இக்கிணறு இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் அபாநேரி கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த படிக்கிணறு 13 தளங்களுடனும், நூறு அடி ஆழமும் கொண்டது.

                                               

அமிர்தவர்சினி படிக்கிணறு

Amritavarshini Vav அமிர்தவர்சினி படிக்கிணறு Amritavarshini Vav or Panchkuva Stepwell or Katkhuni Vav, இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரத்தில் உள்ள படிக்கிணறாகும். இது பாதுகாக்கபப்ட்ட சின்னங்களில் ஒன்றாக உள்ளது.

                                               

இராணியின் கிணறு

இராணியின் படிக்கிணறு இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பதான் மாவட்டத் தலைமையகமான பதான் நகரத்தில் அமைந்துள்ள ஒரு படிக்கிணறு ஆகும். நூற்றுக்கணக்கான படிகளுடன் கூடிய அழகிய இக்கிணற்றை இந்தியாவில் உள்ள உலக பாரம்பரியக் களங்களின் ஒன்றாக 22 சூன் 2014 அன்று ...

                                               

இராமேசுவரம்

இராமேசுவரம் அல்லது இராமேஸ்வரம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இராமேஸ்வரம் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். இது பாம்பன் தீவில் அமைந்துள்ள நகர் ஆகும். தீபகற்ப பகுதியுடன் பாம்பன் பாலம் இத் ...

                                               

இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்

இராமேசுவரம் இராமநாதசுவாமி திருக்கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற இத்தலம் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில், ராமேஸ்வரத்தில் அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள 12 ஜ ...

                                               

கங்கை ஆறு

கங்கை, என்பது இந்தியா மற்றும் வங்கதேச நாடுகளின் வழியாக பாய்கின்ற ஒரு ஆறாகும். இது இந்தியாவின் முக்கிய ஆறு. கங்கை இந்தியாவின் தேசிய நதி ஆகும். இமய மலையில் உத்தராகண்டம் மாநிலத்திலுள்ள கங்கோத்ரியில் தொடங்கும் பாகிரதி நதியானது, தேவப்பிரயாக் எனுமிடத்த ...

                                               

கன்னியாகுமரி (பேரூராட்சி)

கன்னியாகுமரி - Malayalam:കന്യാകുമാരി), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், அகத்தீஸ்வரம் வட்டத்தில் இருக்கும் ஒர் பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சியில் கன்னியாகுமரி தொடருந்து நிலையம் உள்ளது. கன்னியாகுமரியில் தேவி கன்ன ...

                                               

காசி விசுவநாதர் கோயில்

காசி விசுவநாதர் கோயில் என்பது மிகவும் புகழ்வாய்ந்த சிவபெருமானின் கோயிலாகும். இக்கோயில் உத்திரப்பிரதேச மாநிலம், வாரணாசி எனும் இடத்தில் அமைந்துள்ளது. வாரணாசி என்று தற்போது அழைக்கப்பட்டாலும், பழங்காலத்தில் காசி என அழைக்கப்பட்டமையினால் இத்தலம் காசி வ ...

                                               

குருச்சேத்திரம்

குருச்சேத்திரம் pronunciation இந்துக்களின் இதிகாசத்திலும், வரலாற்றிலும் சிறப்பு பெற்ற இடமாகும். குருச்சேத்திரத்தை, தர்மச்சேத்திரம் என்றும் அழைப்பர். இது இந்தியாவில், அரியானா மாநிலத்தில் குருச்சேத்திர மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்நகரம் சண்டிகரிலி ...

                                               

திருப்புல்லாணி

திருப்புல்லாணி இது இந்தியா, தமிழ்நாடு, இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், திருப்புல்லாணி ஊராட்சியில் அமைந்த சிற்றூர் ஆகும்.

                                               

தெப்பக்குளம்

இந்து சமயக் கோயில்களின் உள்ளேயோ அல்லது வெளியிலோ தெப்பக்குளம் அமைக்கப்படுகிறது. தெப்பக்குளங்கள் இந்து சமய விழாக்களுடன் தொடர்புடையதாய் இருக்கிறது. இலங்கையில் தெப்பக்குளத்தை கேணி என அழைக்கிறார்கள். வட இந்தியாவில் புஷ்கரணி, சரோவர், கல்யாணி, தீர்த்தம் ...

                                               

படித்துறை

படித்துறை அல்லது காட் என்ற வட மொழிச் சொல்லிற்கு நீர் நிலைகளில் இறங்கி குளிப்பதற்கு அமைக்கப்பட்டிருக்கும் வரிசையாக பரந்த படிகள் கொண்ட கட்டிட அமைப்பு எனப் பொருளாகும். இராமேஷ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்தம் போன்ற புனிதக் கடல் பகுதி, கங்கை ஆறு, சிப்ரா ...

                                               

புஷ்கர் ஏரி

புஷ்கர் ஏரி அல்லது புஷ்கர் சரோவர், மேற்கு இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் அஜ்மீர் மாவட்டத்தில் புஷ்கர் நகரில் அமைந்துள்ளது. புஷ்கர் ஏரி, இந்துக்களின் யாத்திரைத் தலம் மற்றும் புனிதத் தீர்த்தங்களில் ஒன்றாகும். இந்து வேதங்கள் இது "தீர்த்த ராஜ்" எ ...

                                               

முக்தி தரும் ஏழு நகரங்கள்

முக்தி தரும் ஏழு நகரங்கள் அல்லது சப்த மோட்ச புரிகள் என்பது இந்துக்களின் தொன்ம நம்பிக்கையின்படி ஏழு புனித நகரங்கள் முக்தி தர வல்லவைகள். புரி எனும் சமசுகிருத மொழிச் சொல்லிற்கு நகரம் என்று பொருள். இந்த ஏழு புனித நகரங்களில் உள்ள புனித நீரில் நீராடினா ...

                                               

ஆப்ரேசன் விண்ட்மில்

அமெரிக்க ஐக்கிய கடற்படை அண்டார்டிக்காவில் பல்வேறு நோக்கங்களுக்காக ஆய்வு பணிகளை மேற்கொண்டது.முதலில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு பணி "முதலாவது அண்டார்டிகா வளர்ச்சி திட்டம்-ஆப்ரேசன் ஹைஜம்ப்" ஆகும். இத்திட்டத்தின் தொடர் பணியாக மேற்கொண்ட ஆய்வு தான் "இரண்டாவ ...

                                               

ஆழ் கடல் நீர்

ஆழ் கடல் நீர் என்பது புவியின் மேற்பரப்பில் காணப்படும் கடலின் ஆழத்தில் காணப்படும் குளிர்ச்சியான மற்றும் உப்பான தண்ணீரைக் குறிக்கும் பெயராகும். வெப்பத்தாலும் கரைந்துள்ள உப்பாலும் கடல்நீர் வேறுபடுகிறது. ஆழ் கடல் நீர் மற்றும் துருவப்பகுதியில் காணப்பட ...

                                               

ஆழ்கடல் அளவியல்

ஆழ்கடல் அளவியல் என்பது கப்பல் போக்குவரத்து மற்றும் பல்வேறு வகையான துறைமுகங்கள் அமைத்தல், போன்ற பல காரணங்களுக்காக கடலின் ஆழத்தைப் பற்றிய விவரங்களை அளக்கும் முறையின் பெயராகும். இதற்கு எதிரொலி ஆழமானி என்னும் கருவி பயன்படுத்தப்படுகிறது. இக்கருவி மூலம ...

                                               

உப்புநீர் குளம்

உப்புநீா் குளம் என்பது கடலுக்கடியில் உள்ள ஒரு மிகப்பெரிய பகுதி ஆகும். இப்பகுதி அதன் சுற்று வட்டார நீா் பகுதிகளை ஒப்பிடும் போதும மூண்றிலிருந்து பத்து மடங்கு வரை உப்புத்தன்மை அதிகமாக இருக்கும்.இந்த உப்புக் கரைசலுக்கு காரணம் மிகப்பெரிய உப்புப் படிமங ...

                                               

உலகப் பெருங்கடல்கள் நாள்

உலகப் பெருங்கடல்கள் நாள் எனும் இந்நாளை ஆண்டுதோறும் உலக நாடுகள் முழுவதும் சூன் 8 ஆம் நாளன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிகழ்வை, 1992 ஆம் ஆண்டில் பிரேசிலின், இரியோ டி செனீரோ நகரில் இடம்பெற்ற பூமி உச்சி மாநாட்டில், முதன் முறையாக கனடா இந்நிகழ்வுக்கான க ...

                                               

ஓதம்

ஓதம் என்பது நிலவு, சூரியன் போன்ற விண்வெளி பொருட்களால் கடலில் உள்ள நீர்மட்டம் உயர்வதையும் தாழ்வதையும் குறிக்கும். ஆழ்கடல் பரப்புத் தவிர்ந்த தரையும் கடலும் சார்பரப்பில் உருவாகும் ஓதங்களைப் பொதுவாக இரு வகைகளாகக் குறிப்பிடலாம். ஒன்று கழி ஓதம் - மற்றை ...

                                               

கடல் குளிரூட்டல்

கடல் குளிரூட்டல் என்பது கடல் பயணத்தின் போது பொருள்கள் அழுகிக் கெட்டு போகாமலும், இயற்கை தன்மை மாறாமலும் பாதுகாத்து எடுத்துச் செல்வதற்குக் கடல் குளிரூட்டல் தேவைப்படுகிறது.

                                               

கடல் படிவு

கடல் படிவுகள் என்பன இயற்கையாகக் காணப்படும் மூலப்பொருள்கள் புவித் தட்பவெப்பநிலை மாற்றங்கள் மற்றும் அரிப்பு காரணமாக ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு காற்று, பனி, மற்றும் நீர் மூலம் கொண்டு செல்லப்பட்டு உருவாக்கப்படுகின்றன. புவி வரலாறு பற்றி ஆரா ...

                                               

கடலடி நிலத்தோற்றம்

கடலடி நிலத்தோற்றம் என்பது கடலின் அடிப்பகுதியில் உள்ள நில அமைப்பைக் குறிப்பதாகும். அதிசயமும் ஆச்சரியமும் நிறைந்த ஆழ்கடல் மற்றொரு உலகத்திற்குச் சமமானது. பூமியில் 70.8 விழுக்காடு கடல் நீர் நிறைந்துள்ளது. பருவக்காற்றும் பெய்யும் மழையும் நிலவும் வானில ...

                                               

கடலலை

காற்றலை அல்லது கடலலை என்பது நீர்நிலைகளின் அல்லது கடல் மீது காற்றின் கீழ்நோக்கிய விசை, இழுவிசை ஆகியவை கூட்டாகச் செயல்படுவதால் தோன்றும் அசைவுகளாகும்.எளிமையாகக் கூறுவதென்றால் காற்றினால் தோன்றுகின்ற அலைகள் காற்றலைகள் என்ப்படும். நீர்ப்பரப்புகளின் மீத ...

                                               

சலஞ்சர் ஆய்வுப் பயணம்

சலஞ்சர் ஆய்வுப் பயணம் என்பது பொதுவாக 1872 - 76 ஆண்டுக் காலப் பகுதியில் இடம்பெற்ற ஒரு அறிவியல் ஆய்வுக்கான கடல் பயணத்தைக் குறிக்கும். இவ்வாய்வுகளின் போதான பல கண்டுபிடிப்புக்கள் கடலியல் துறையின் தொடக்கத்துக்கான அடிப்படையாக அமைந்தது. எடின்பரோ பல்கலைக ...

                                               

சூரிய ஒளி மண்டலம்

கடல் அல்லது ஏரியின் எந்த அளவு ஆழம் வரை ஒளிச்சேர்க்கை செய்ய சூரிய ஒளி கிடைக்கிறதோ அந்த ஆழம் வரை உள்ள பகுதியை சூரிய ஒளி மண்டலம் அல்லது ஒளி நிரம்பிய மண்டலம் என்று அழைக்கிறார்கள். இது கடலின் மேற்பரப்பிலிருந்து ஒளியின் அடர்த்தி 1% ஆகக் குறையும் வரை உள ...

                                               

செயற்கை கடல்நீர்

செயற்கை கடல்நீர் என்பது தாது உப்புகளும் உயிர்ச்சத்துக்களும் கலந்து கரைந்துள்ள கடல்நீரையொத்த கலவைநீராகும். இந்நீர் கடல் உயிரியியலில் மற்றும் கடல்சார் பாறையடி நீர் வாழினங்கள் ஆகியவற்றிற்காக முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது. பாசிகள், பாக்டீரியா, தா ...

                                               

தூர்வாரல்

தூர்வாரல் என்பது நீருக்கு அடியில் தோண்டும் நடவடிக்கை ஆகும். இது பொதுவாக ஆழமற்ற பகுதியை ஆழமாக்க மற்றும் நீர் தேக்கங்களிலுள்ள தேவையற்ற மணல் மற்றும் படிவுகளை அகற்றும் பணி ஆகும்.மேலும் கப்பல் செல்லும் பாதையை அகல படுத்தவது, கப்பல் பயனிக்க ஆழமான பாதையை ...

                                               

புவியரிமானப் படிவுகள்

புவியரிமானப் படிவுகள் என்பவை நிலப்பரப்புகளில் உள்ள பாறைகள் அரிக்கப்படுவதால் பெறப்பட்ட படிவுகளைக் குறிக்கிறது. அதாவது கடற்பகுதிக்கு எதிரான நிலப்பகுதி சூழலிலிருந்து இப்படிவுகள் உருவாகின்றன. மணல், சேறு, மற்றும் வண்டல் ஆகியனவற்றைக் கொண்டுள்ள இப்படிவு ...

                                               

பெருங்கடல்

பெருங்கடல் என்பது முக்கியமான உப்பு நீர் நிலை ஆகும். இது நீர்க் கோளத்தின் முக்கியமான கூறும் ஆகும். ஏறத்தாழ 71% புவி மேற்பரப்பு தொடர்ச்சியாக அமைந்துள்ள பெருங்கடல்களினால் மூடப்பட்டுள்ளது. இது பல பெருங்கடல்களாகவும், பல சிறிய கடல்களாகவும் பிரிக்கப்பட் ...

                                               

லாப்ரடார் கடல்

லாப்ரடார் கடல் வடக்கு அத்திலாந்திக்கு பெருங்கடலின் கரம் போன்று அமைந்துள்ள கடலாகும். இது லாப்ரடோர் மூவலந்தீவிற்கும், கிறீன்லாந்திற்கும் இடையில் அமைந்துள்ளது. இந்தக் கடலானது கண்டத் திட்டுகளால் தென்மேற்கு, வடமேற்கு, மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் மட ...

                                               

வான் கடலியல்

வான் கடலியல் என்பது பூமி என்ற கிரகத்திற்கு வெளியே இருக்கும் கடல்களைப்பற்றி படிக்கின்ற அறிவியல் துறையாகும். வான் உயிரியல், வான் வேதியியல் மற்றும் வான் நிலவியல் முதலான பிற கிரக அறிவியல் துறைகளைப் போல அல்லாமல், சனி கோளின் டைட்டன் துணைக்கோளிலும் வியா ...

                                               

விண்வெளிக்கடலியல்

விண்வெளிக்கடலியல் என்பது பூமி என்ற கோள்கிரகத்துக்கு வெளியே இருக்கும் கடல்களைப் பற்றிப் படிக்கும் அறிவியல் துறையாகும். விண்வெளி உயிரியல், விண்வெளி வேதியியல், விண்வெளி நிலவியல் போன்ற மற்ற கோள் அறிவியல் துறைகள் போலல்லாமல் சனி கோளின் டைட்டன் மற்றும் ...

                                               

பொருளாதாரத் தனியுரிமைப் பகுதி

பொருளாதாரத் தனியுரிமைப் பகுதி அல்லது பொருளாதாரத் தனியுரிமை வலயம் என்பது ஓர் நாடு, கடலை ஆய்வு செய்வது குறித்தும், காற்று மற்றும் நீரிலிருந்து வடிக்கப்படும் மின்சாரம் உள்ளிட்ட பல கடல் சார் வளங்களைப் பயன்படுத்துவது குறித்தும் பெறும் சிறப்பு உரிமைகளை ...

                                               

கரும்பாறை பாலைவனம்

கரும்பாறை பாலைவனம் ஐக்கிய அமெரிக்காவின் நெவாடா மாநிலத்தின் வடபகுதியில் கிரேட் பேசின் பகுதியில் அமைந்துள்ள மிதவறட்சி நிலப்பகுதியாகும். இது எரிமலைக் குழம்பு மற்றும் வற்றும் பகுதிகளாலும் அடர்வனப் பகுதிகளையும் உள்ளடக்கியது. இங்கு பெய்யும் ஆண்டு சராசர ...

                                               

இரட்டைத்திமில் ஒட்டகம்

இரட்டைத்திமில் ஒட்டகம் என்பது இரட்டைத் திமில் கொண்ட, பாலூட்டி விலங்கினத்தைச் சேர்ந்த ஒட்டகம் ஆகும். இவ் ஒட்டகங்கள் ஈடான சுமை தாங்கும் இரட்டைக் குளம்புகளைக் கொண்டுள்ளன. இவை சீனாவின் வடக்கேயும், மங்கோலியாவிலும் உள்ள கோபி பாலைநிலப்பகுதியில் வாழ்கின் ...

                                               

கங்காரு எலி

கங்காரு எலி என்பது வட அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் வளரக்கூடிய சிறிய வகைக் கொறிணி ஆகும். இவற்றின் பொதுவான பெயர் இவைகளின் இருகால் வடிவத்தில் இருந்து பெறப்பட்டது. எனினும் இவை அவுஸ்திரேலிய உலர் சமவெளிப் பகுதிக்குரிய பெரிய கங்காரு போன்று இல்லை. என ...

                                               

கறகால் பூனை

கறகால் பூனை என்பது ஒரு நடுத்தர அளவுள்ள காட்டுப் பூனை ஆகும். இதன் சுற்றளவு ஏறக்குறைய ஒரு மீட்டர் இது ஆப்பிரிக்காவிலும், மத்திய ஆசியாவிலும், தென்மேற்கு ஆசியா, இந்தியா ஆகிய இடங்களை இருப்பிடமாகக் கொண்டது. இந்த பூனை பெயரான கறகால் என்பது துருக்கி மொழிய ...

                                               

கிலா அரக்கப் பல்லி

கிலா அரக்கப் பல்லி என்பது பயங்கரமான தோற்றத்தைக் கொண்ட ஓணான் இனமாகும். இது பொந்துகளுக்குள் பதுங்கி வாழும் தன்மையுடையது. திடீரென்று தாக்குதல்களை நடத்தி பறவைக் குஞ்சுகளை பிடித்து உண்ணும். கடினத்தன்மை கொண்ட அதன் வால்ப்பகுதியில் கொழுப்பு சேகரிக்கப்படு ...

                                               

சகாரா மணல் விரியன்

சகாரா மணல் விரியன் என்பது ஒரு பாம்பாகும். இப்பாம்பு இனம் பாதுகாப்பாக மணல்களுக்குள் ஊர்ந்து சென்று வாழும் தன்மை கொண்டது. மணல் பகுதிகளுக்குள் மறைந்திருந்து திடீரெனத்தாக்கி இரையைப் பிடித்துக்கொள்ளும் ஆற்றலையும் கொண்டது. இதன் உயிரியற் பெயர் Cerastes ...

                                               

நமீப் பாலைவன வண்டு

தென் ஆப்பிரிக்காவில் உள்ள நமீப் பாலைவனத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு வகை வண்டு இசுடெனோகாரா கிராசிலிப்பிசு ஆகும். நமீப் பாலைவனம் உலகின் மிக வறண்ட பகுதிகளில் ஒன்றாகும். இங்கு ஆண்டிற்கு சுமார் 1.4 சென்டிமீட்டர்கள் மழை மட்டுமே பெய்கிறது. இச்சூழலில் அத ...

                                               

பாலைவன யானைகள்

பாலைவன யானைகள் ஆப்பிரிக்காவின் நமீபியா, மாலி மற்றும் சகாரா பாலைவனப் பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் வாழிடங்களைக் கொண்டுள்ளன. இவை சிறு மரம், செடி, கொடிகள் அடர்ந்த புதர் பகுதிகளில் வாழ்கின்றன. பருவ காலங்களில் உணவு மற்றும் குடிநீர் ஆதாரங்களுக்காக அலைந்து ...

                                               

காவு தீவு

காவு என்பது பிஜியின் லொமாய்விட்டி தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறு தீவு. 18.00°தெ மற்றும் 179.30°கி அமைந்துள்ள இத்தீவின் பரப்பளவு 136.1 சதுர கிலோமீட்டர்கள். இதன் மொத்த கரைப்பகுதி 66.3 கிலோமீட்டர்கள் நீளமானது. இதன் மிக அதிகமான உயரம் 738 மீட்ட ...

                                               

தவெவுனி

தவெவுனி என்னும் தீவு பிஜி நாட்டிற்கு உரியது. வானுவாலெவு, விட்டிலெவு ஆகிய தீவுகளுக்கு அடுத்த பெரிய தீவு. இது 434 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. இந்த தீவு தகாந்துரோவ் மாகாணத்தின் ஆட்சிக்கு உட்பட்டது. இங்கு ஏறத்தாழ 9.000 பேர் வசிக்கின்றனர்.

                                               

விட்டிலெவு

விட்டி லெவு என்பது பிஜி நாட்டின் பெரிய தீவு. இந்த தீவில் உள்ள சுவா நகரமே பிஜியின் தலைநகரம். பிஜியின் மற்ற தீவுகளைவிடவும், இந்த தீவில் அதிகளவிலான மக்கள் வாழ்கின்றனர். ஏறத்தாழ 70 % மக்கள் இங்கு வாழ்கின்றனர். இதன் பரப்பளவு 10.289 சதுர கிலோமீட்டர்கள் ...

                                               

கிழக்கிந்தியத் தீவுகள்

கிழக்கிந்தியத் தீவுகள் அல்லது இந்தியத் தீவுகள் அல்லது என்ற சொல்லாடல் இந்திய ஒன்றியம், பாக்கித்தான், வங்காளதேசம், மியான்மர், இலங்கை, மாலைத்தீவுகள் மேலும் தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ், புரூணை, சிங்கப்பூர், பிலிப்பீன்சு, கிழக்குத் திமோர், மலேசியா ம ...

                                               

சாங்சரன்

சக்சரான் அல்லது சக்செரான், also called Chakhcheran) என்பது மத்திய ஆப்கானித்தானில் அமைந்துள்ள நகரமும் மாவட்டமும் ஆகும். இது முற்காலத்தில் ஆஹங்கரான் என்று அழைக்கப்பட்டது. இது கோர் மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். சக்சரான் கடல் மட்டத்திலிருந்து 2.230 ம ...

                                               

செண்டாய்

செண்டாய் மத்திய ஜப்பானில், தொக்கு மண்டலத்தில், மியாகி மாவட்டத்தின் அதிகார எல்லைக்கு உட்பட்ட 12 நகரங்களுக்கு, மத்திய நகரம் ஆகும். இந்நகரம் ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் இருந்து 300 கி.மீ தூரத்தில் வடக்கே அமைந்துள்ளது, நடைமுறையில் செண்டாய் மத்திய ...