ⓘ Free online encyclopedia. Did you know? page 217




                                               

படிமங்களின் நம்பிக்கைத் துரோகம் (ஓவியம்)

படிமங்களின் நம்பிக்கைத் துரோகம் என்பது, அடிமன வெளிப்பாட்டுவாத ஓவியரான ரேனே மார்கிரிட் என்பவரால் வரையப்பட்டது. இது, இவ்வோவியத்தில் எழுதப்பட்டுள்ள இது சுங்கான் அல்ல என்னும் தொடருக்காகப் பெயர் பெற்றது. இது இப்பொழுது, லாஸ் ஏஞ்சலிசில் உள்ள கவுண்டி ஓவி ...

                                               

புத்தகப்புழு (ஓவியம்)

புத்தகப்புழு என்பது 1850 ஆம் ஆண்டில் செருமன் ஓவியரும் கவிஞருமான கார்ல் இசுப்பிட்சுவெக் என்பவரால் வரையப்பட்ட எண்ணெய் வண்ண ஓவியம் ஆகும். இவ்வோவியம் நெப்போலியப் போர்களுக்கும், 1848 ஆம் ஆண்டின் புரட்சிக்கும் இடைப்பட்ட காலத்து ஐரோப்பாவின் உள்நோக்கிய, ...

                                               

மல்லச்சந்திரம் பெருங்கற்கால ஓவியங்கள்

தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மல்லச்சந்திரம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெருங்கற்கால கற்திட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுளன. குறிப்பாக பத்துக்கும் மேற்பட்ட கல்திட்டைகளில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இவை வெள்ளை வண்ணத்திலும் ஒரு கல்தி ...

                                               

மார்த்தாவும் மகதலா மரியாவும் (கரவாஜியோ)

மார்த்தாவும் மகதலா மரியாவும் என்பது புகழ்பெற்ற இத்தாலிய ஓவியரான கரவாஜியோ என்பவரால் வரையப்பட்ட ஓர் ஓவியம் ஆகும். இதை கரவாஜியோ என்னும் பரோக்கு கலை ஓவியர் சுமார் 1598இல் வரைந்தார். இந்த ஓவியம் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் டெட்ராய்ட் நகர் கலைக்கூடத்தில் ...

                                               

மார்பளவுத் தோற்றச் சிற்றோவியம்

மார்பளவுத் தோற்றச் சிற்றோவியம் என்பது, நீர்வர்ணம், குவாச் அல்லது எனாமல் பூச்சுக்களைக் கொண்டு வரையப்படும் சிறிய அளவிலான ஓவியத்தைக் குறிக்கும். இவ்வகை ஓவியம் கையெழுத்துப் பிரதிகளில் வரையப்பட்ட சிற்றோவிய நுட்பங்களில் இருந்து வளர்ச்சியடைந்தது. 16 ஆம் ...

                                               

முடிசூடிய மரியா (ஜியோட்டோ)

முடிசூடிய மரியா என்பது நடுக்கால இறுதியில் வாழ்ந்த ஜியோட்டோ டி போண்டோனே என்னும் இத்தாலிய கலைஞர் வரைந்த ஓர் ஓவியம் ஆகும். இது இத்தாலியின் புளோரன்சு நகரில் உஃப்ஃபீசி கலைக்கூடத்தில் காக்கப்பட்டு வருகிறது. இந்த ஓவியம் சுமார் 1310ஆம் ஆண்டின் வரையப்பட்ட ...

                                               

முத்துத் தோட்டுடனான சிறுமி (ஓவியம்)

முத்துத் தோட்டுடனான சிறுமி நெதர்லாந்தைச் சேர்ந்த ஓவியரான ஜொஹான்னெஸ் வெர்மீர் என்பவரின் மிகச் சிறந்த ஓவியங்களுள் ஒன்று. இதன் பெயர் குறிப்பதுபோலவே இவர் ஒரு முத்துத் தோட்டை ஒரு குவியப்புள்ளியாகப் பயன்படுத்தியுள்ளார். இந்த ஓவியம் தற்போது, ஹேக் நகரில் ...

                                               

ரோமன் சேரிட்டி

ரோமன் சேரிட்டி என்பது ஒரு பெண்ணின் முன்மாதிரிக் கதையாகும். பெரோ என்னும் பெண்ணின் தந்தையான சிமோன் என்பவர் சிறையில் அடைக்கப்பட்டு பட்டிணிக்கு உள்ளாக்கப்பட்டு மரண தண்டணைக்கு ஆளாக்கப்பட்டார். சிறையில் தந்தையை சந்திக்கச் சென்றபெரோ இரகசியமாக அவரின் உயி ...

                                               

லா கிரான்டே ஜாட் தீவில் ஒரு ஞாயிற்றுக்கிழமை பின்னேரம்

லா கிரான்டே ஜாட் தீவில் ஒரு ஞாயிற்றுக்கிழமை பின்னேரம் என்பது, யோர்ச் சோரா என்னும் பிரான்சிய ஓவியரால் வரையப்பட்ட ஒரு புகழ் பெற்ற ஓவியம். இது புள்ளியியம் என்னும் ஓவியப் பாணியின் எடுத்துக்காட்டும் ஆகும்.

                                               

வயதான கிட்டார் கலைஞர்

வயதான கிட்டார் கலைஞர் என்பது, 1903ன் பிற்பகுதிக்கும், 1904ன் முற்பகுதிக்கும் இடைப்பட்ட காலத்தில் புகழ்பெற்ற ஓவியரான பாப்லோ பிக்காசோவினால் வரையப்பட்ட ஓவியம் ஆகும். இவ்வோவியம், எசுப்பெயினில் உள்ள பார்சிலோனாவின் தெருவில், வயதான, கண்பார்வையற்ற, களைத் ...

                                               

வானியலாளர் (ஓவியம்)

ஓவியத்துறையில் வானியலாளர் என்பது டச்சு ஓவியரான யொகான்னசு வெர்மீர் என்பவரால் 1668 ஆம் ஆண்டளவில் வரையப்பட்ட ஓவியத்தைக் குறிக்கும். எண்ணெய் வண்ணம் கொண்டு 51 சமீ x 45 சமீ அளவுள்ள கன்வசில் வரையப்பட்ட இவ்வோவியம் தற்போது பாரிசு நகரில் உள்ள லூவர் அருங்கா ...

                                               

விண்மீன்கள் நிறைந்த இரவு

விண்மீன்கள் நிறைந்த இரவு என்பது நெதர்லாந்து பின்-உணர்வுப்பதிவுவாத ஓவியர் வின்சென்ட் வான் கோ என்பவரால் வரையப்பட்டது. தெற்கு பிரான்சிலுள்ள தன்னுடைய வீட்டுப் பலகணிக்கு வெளியே இரவில் தெரியும் காட்சியைச் சித்தரித்து, அவர் நினைவிலிருந்து வரையப்பட்டது. ...

                                               

வெளியார் ஓவியம்

வெளியார் ஓவியம் என்பது, தாமே கற்றுக்கொண்டவர்களால் அல்லது குறைந்த ஓவிய அறிவு கொண்டவர்களால் வரையப்படும் ஓவியங்களைக் குறிக்கும். வெளியார் ஓவியர்களாக அடையாளம் காணப்படுபவர்கள் முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓவிய உலகத்துடனோ, ஓவிய நிறுவனங்களுடனோ மிகக் குறைவ ...

                                               

அடிமன வெளிப்பாட்டியம்

அடிமன வெளிப்பாட்டியம் என்பது, ஒரு பண்பாட்டு, சமூக மற்றும் இலக்கிய இயக்கம் ஆகும். இது இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் மேலோங்கியிருந்தது. மனித மனத்தை விடுதலை செய்வதன்மூலம், தனிமனிதனையும், சமூகத்தையும் விடுதலை செய்யலாம் என்று இதன் சார்பாளர்கள் ந ...

                                               

ஆர்பியம்

ஆர்பியம் அல்லது ஆர்பியக் கியூபிசம் என்பது, கியூபிசத்தில் இருந்து கிளைத்த ஒரு கலை இயக்கம். ஓவியங்களில் தூய பண்பியல் தன்மையையும், பிரகாசமான நிறங்களையும் பயன்படுத்திய இவ்வியக்கத்தினர், பால் சிக்னாக், சார்லசு என்றி, சாய வேதியியலாளரான யூசென் செவ்ரோல் ...

                                               

உணர்வுப்பதிவுவாதம்

உணர்வுப்பதிவுவாதம் என்பது 19 ஆம் நூற்றாண்டின் கலை இயக்கங்களில் ஒன்று. 1860 இல் தங்களுடைய ஆக்கங்களைப் பொதுமக்கள் பார்ப்பதற்காகக் காட்சிக்கு வைக்கத் தொடங்கிய பாரிஸ் நகரத்தைச் சேர்ந்த ஓவியர்களில் இணைப்பில் உருவானது. குளோட் மொனெட் என்பவர் வரைந்த உணர் ...

                                               

கியூபிசம்

இத்தாலிய மறுமலர்ச்சி இயக்கத்துக்குப் பின்னர் உருவான கலை இயக்கங்களுள் மிக முக்கியமானதும், செல்வாக்கு மிக்கதுமான கலை இயக்கம் கியூபிசம் என்று சொல்லலாம். 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் ஐரோப்பாவில், ஓவியம் மற்றும் சிற்பக்கலைத் துறையில் புரட்சிகரம ...

                                               

சுதை ஓவியம்

சுதை ஓவியம் என்பது சுண்ணாம்பு காரைப்பூச்சு சாந்து மீது வரையப்படும் ஓர் சுவர் ஓவிய தொழில் நுட்பமாகும். நிறமூட்டுப் பொருளுக்கான ஊடு பொருளாக நீர் பாவிக்கப்பட்டு, சாந்தினை சரி செய்து, வண்ணப் பூச்சு சுவருடன் சேர்ந்துவிடும் ஒன்றாக இம்முறை உள்ளது. சுதை ...

                                               

நீர்வர்ணம்

நீர்வர்ணம் என்பது ஓவியம் வரையப்பயன்படுத்தும் திரவ வர்ணமாகும். நீரில் கலந்து பயன்படுத்துவதால் இந்தப்பெயர் பெற்றது. நீர் வர்ணங்கள் திரவமாக பல்வேறு தன்மைகளில் கிடைக்கின்றன. அதற்கமைய கட்டிகளாகவும், பசையாகவும், தூள்களாகவும் கிடைக்கின்றன. இதை நீரில் தக ...

                                               

பண்பியல் ஓவியம்

தற்காலத்தில் பண்பியல் ஓவியம் என்பது, உலகப் பொருட்களை வரையாமல், நிறங்களையும், வடிவங்களையும் பயன்படுத்தி வரையப்படும் ஓவியமாகப் புரிந்து கொள்ளப்படுகின்றது. ஆனால், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இயல்பான உருவங்களை எளிமையான வடிவில், அவற்றின் உலக இயல ...

                                               

பிக்காசோவின் ஆப்பிரிக்கக்காலம்

பிக்காசோவின் ஆப்பிரிக்கக் காலம் என்பது, ஆப்பிரிக்க சிற்பங்களினாலும், மரபுவழி ஆப்பிரிக்க முகமூடிகளினாலும் தூண்டப்பட்டு பாப்லோ பிக்காசோ ஒரு குறிப்பிட்ட பாணி ஓவியங்களை வரைந்த காலப்பகுதியாகும். இக்காலப்பகுதி 1906 முதல் 1909 வரையானது. பிக்காசோவின் நீல ...

                                               

பிக்காசோவின் இளஞ்சிவப்புக்காலம்

பிக்காசோவின் இளஞ்சிவப்புக்காலம், எசுப்பானிய ஓவியரான பாப்லோ பிக்காசோவின் வாழ்விலும், தொழிலிலும் முக்கியமான ஒரு காலகட்டம். அத்துடன் இது நவீன ஓவியத்தின் உருவாக்கத்தில் பெருமளவு தாக்கத்தைக் கொண்டிருந்தது. இது 1904ல் பொகீமியக் கவிஞர்கள், எழுத்தாளர்கள் ...

                                               

பிக்காசோவின் நீலக்காலம்

பிக்காசோவின் நீலக்காலம் என்பது, புகழ்பெற்ற எசுப்பானிய ஓவியரான பாப்லோ பிக்காசோ தனது ஓவியங்களை நீலத்தின் பல்வேறு சாயல்களை மட்டும் பயன்படுத்தி வரைந்த காலப்பகுதியைக் குறிக்கிறது. அரிதாக வேறு சில நிறங்களும் பயன்படுத்தப்பட்டது உண்டு. இக்காலம் 1901 முதல ...

                                               

பிரிப்பியம்

பிரிப்பியம் என்பது, புது உணர்வுப்பதிவுவாத ஓவியங்களில் காணப்படும் சிறப்பியல்பான பாணி ஆகும். இதில், நிறங்கள் கூறுகளாகப் பிரிக்கப்பட்டு புள்ளிகளாகவோ, பகுதிகளாகவோ வரையப்பட்டு ஒளியியல் அடிப்படையில் பொருட்களின் உண்மை நிறத்தைக் கொடுக்கும்படி செய்யப்படுக ...

                                               

பின்-உணர்வுப்பதிவியம்

பின்-உணர்வுப்பதிவியம் அல்லது பின்-உணர்வுப்பதிவுவாதம் என்பது, ஓவியர் எடுவார்ட் மனேயுடன் தொடங்கி பிரான்சில் உருவாகி வளர்ந்த ஓவியப் பாணியொன்றக் குறிக்கிறது. இது, முதன்மையாக ஒரு பிரெஞ்சுக் கலை இயக்கம் ஆகும். இது ஏறத்தாழ 1886 முதல் 1905 வரையான காலப் ப ...

                                               

போவியம்

போவியம் இது பிரெஞ்சு மொழியில் காட்டு விலங்குகள் என்னும் பொருள்படும் லெ ஃபோவே என்னும் பெயருடைய நவீன ஓவியர்களைக் கொண்ட குழுவினரின் ஓவியப் பாணியைக் குறிக்கும். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியைச் சேர்ந்த இவ்வோவியர்களுடைய படைப்புக்கள் மிகைப்படுத ...

                                               

அன்னா பொச்

அன்னா பொச் ஒரு பெல்சிய ஓவியர் ஆவார். எனூவில் உள்ள சான் வா என்னும் இடத்தில் பிறந்த இவர் 1936ல் பெல்சியத்தில் உள்ள பிரசெல்சில் இக்செல் என்னும் இடத்தில் காலமானார். இவர் புது-உணர்வுப்பதிவுவாத இயக்கத்தில் பங்குபற்றியிருந்தார். இவரது தொடக்ககால ஆக்கங்கள ...

                                               

ஆசித் குமார் ஆல்தார்

ஆசித் குமார் அல்தார் இவர், வங்காள கலைப் பள்ளியின் இந்திய ஓவியரும் மற்றும் சாந்திநிகேதனில் இரவீந்திரநாத் தாகூரின் உதவியாளரும் ஆவார். மேலும், வங்காள மறுமலர்ச்சியின் முக்கிய கலைஞர்களில் ஒருவராக இருந்தார்.

                                               

நிக்கோ பிரொசுமானி

நிக்கோ பிரொசுமானி ஒரு சியோர்சிய ஓவியக் கலைஞர் ஆவார். இவர் இறந்த பின்னரே இவரது கலைப்படைப்புகளுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்தது.

                                               

பிரான்டிசேக் குப்கா

பிரான்டிசேக் குப்கா என்பவர், ஒரு செக் நாட்டு ஓவியர். இவர் பிராங்க் குப்கா, பிராங்கோயிசு குப்கா என்னும் பெயர்களாலும் அறியப்பட்டவர். இவர் ஆர்பியம், பண்பியல் ஓவிய இயக்கத்தின் தொடக்க கட்டம் போன்றவற்றின் முன்னோடியும் இணை நிறுவுனரும் ஆவார். இவரது ஆக்கங ...

                                               

பெத்ரோ அமெரிக்கோ

பெத்ரோ அமெரிக்கோ டெ பிகெரேத்தோ இ மெலோ பிரேசிலின் மிக முக்கியமான ஓவியக் கலை கல்வியாளர்களில் ஒருவராவார். இவர் எழுத்தாளராகவும் ஆசிரியராகவும் இருந்தார்.

                                               

மசாச்சியோ

மசாச்சியோ புளொரன்சைச் சேர்ந்த ஒரு ஓவியர். இவரது இயற்பெயர் தொம்மாசோ டி செர் யோவன்னி சி சிமோனி. இத்தாலிய மறுமலர்ச்சியில் குவாட்ரோசென்டோ காலத்தில் முதல் பெரும் இத்தாலிய ஓவியராக இவர் மதிக்கப்படுகின்றார். வாசரியின் கூற்றுப்படி, இயற்கையை உள்ளபடியே வரைய ...

                                               

யோன் மெட்சிங்கர்

யோன் டொமினிக் அந்தனி மெட்சிங்கர் என்னும் முழுப்பெயர் கொண்ட யோன் மெட்சிங்கர் 20ம் நூற்றாண்டின் முக்கியமான பிரெஞ்சு ஓவியரும், கோட்பாட்டாளரும், எழுத்தாளரும், திறனாய்வாளரும், கவிஞரும் ஆவார். இவர், அல்பர்ட் கிளெய்சு என்பவருடன் சேர்ந்து கியூபிசத்துக்கா ...

                                               

ஜாமினி ராய்

ஜாமினி ராய் 1954-இல் பத்ம விபூசன் விருது பெற்ற இந்திய ஓவியர் ஆவார். இவர் இந்திய நுண்கலையில் செல்வாக்கு மிக்கவராக கருதப்பட்டவர். இந்தியாவைப் பாரத மாதாவாக வரைந்த புகழ்பெற்ற ஓவியரான அபநீந்திரநாத்தின் மாணாக்கரில் ஜாமினி ராயும் ஒருவர்.

                                               

இதயக்கமலக் கோலம்

இதயக்கமலக் கோலம் என்பது, புள்ளிகள் இட்டு வரையப்படும் ஒரு கோலம் ஆகும். புள்ளிகள் இட்டபின் ஓரிடத்தில் தொடங்கிக் கையை எடுக்காமலே இக் கோலத்தை வரைந்து முடிக்கலாம் என்பது இதன் சிறப்பு ஆகும். இதனால் இக் கோலத்துக்கு தெய்வீகத் தன்மை இருப்பதாகத் தமிழரில் ஒ ...

                                               

குத்து விளக்குக் கோலம்

குத்து விளக்குக் கோலம் 38 புள்ளிகளை உயரமாகக் கொண்டு வரையப்பட்டுள்ளது. எனினும் இந்த எண்ணிக்கை கட்டாயமல்ல. அவரவர் விருப்பத்துக்கு ஏற்றபடி அழகாயிருக்கத்தக்க வகையில் இந்த எண்ணிக்கையை மாற்றிக்கொள்ளலாம். பல்வேறு முறைகளில் குத்துவிளக்கு வடிவத்தைக் கோலத் ...

                                               

கோலம்

தமிழ்நாடு, இலங்கை போன்ற இடங்களில், கோலங்கள் அரிசிமாவு, முருகைக்கற்பொடி போன்ற வெண்ணிற உலர்வான பொடிகளைக் கொண்டு வரையப்படுகின்றன. பொதுவாக வெளியே தளர்வான மண்தரையாயின், நீர் தெளித்துப் புழுதி அடக்கப்படும். பின்னர் பெருவிரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும ...

                                               

தாமரைக் கோலம்

தாமரைக் கோலம் ஒன்றுடனொன்று 45 பாகை கோணத்தில் வெட்டும் 4 இரட்டைக் கோடுகளை அடிப்படையாகக் கொண்டது. இந்தக் கோடுகளின் ஒன்றுவிட்டொரு முனைகளை வளை கோடுகளால் இணைத்து எட்டு இதழ்களுடைய தாமரை வடிவம் வரையப்பட்டுள்ளது.

                                               

துளசி மாடக் கோலம்

துளசி மாடக் கோலம் 7 x 7 நேர்ப்புள்ளி வலையமைப்பில் இடப்பட்ட புள்ளிகளைச் சுற்றிச்செல்லும் வளை கோடுகளைப் பயன்படுத்திவரையப்பட்ட ஒரேமாதிரியான ஆறு கூறுகளை இணைத்துப் பெறப்பட்டுள்ளது. இவ்வாறான கூறுகளை ஒன்றுடனொன்று மூலைகளில் தொடுத்துக் கோலத்தை விரிவாக்கம் ...

                                               

பாகல் இலைக் கோலம்

பாகல் இலைக் கோலம் பாகற்கொடியின் இலைகளை ஒத்த வடிவங்களைக் கொண்டு வரையப்படும் ஒரு கோலம் ஆகும். அருகில் உள்ள படம் 15 புள்ளிகளில் தொடங்கி, ஊடுபுள்ளிகளாக ஒன்றுவரை புள்ளிகள் இட்டு வரையப்பட்ட கோலம் ஒன்றைக் காட்டுகிறது. புள்ளிகள் நேர்கோடுகளாலும், வளைகோடுக ...

                                               

தஞ்சாவூர் ஓவியத்தட்டு

தஞ்சாவூர் கலைத்தட்டு, தஞ்சாவூர் ஓவியத்தட்டு, தஞ்சாவூர் அலங்காரத்தட்டு அல்லது தஞ்சாவூர்த் தட்டு என்பது தஞ்சாவூரில் உருவாக்கப் பெற்ற செயற்கை அலங்காரப் பொருளாகும். இந்த வட்டமான தட்டு பரிசுப் பொருளாக உருவாக்கப்படுகிறது. இக் கைவினைத்திறன் வெள்ளி, பித் ...

                                               

தஞ்சாவூர் ஓவியப் பாணி

தஞ்சாவூர் ஓவியப் பாணி என்பது தஞ்சை நாயக்கர் காலம் தொட்டு, தஞ்சை மராட்டியர் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலங்களினூடாகத் தமிழ் நாட்டில் வளர்ச்சியடைந்து வந்த ஓர் ஓவியக் கலைப் பாணி ஆகும். பல்வேறுபட்ட காலகட்டங்களில் வளர்ந்து வந்த இப்பாணி, நாயக்கர்களின் ...

                                               

தமிழ்நாட்டு ஓவியக் கலை

தமிழ்நாட்டு ஓவியக்கலை தொன்மையான வரலாற்றைக் கொண்டதாகும். அத்துடன் பல்வேறு காலகட்டங்களையும் சேர்ந்த ஓவியங்கள் முழுதாகவும், சிதைந்த நிலையிலும் குகைகளிலும், பழைய அரண்மனைகளிலும், கோயில்களிலும், வேறு கட்டிடங்களிலும் காணப்படுகின்றன.

                                               

தமிழர் ஓவியம்

ஓவியம் ஒரு கவின் கலை. தமிழ்ச் சூழலில், தமிழர் மரபில், தமிழர்களால் ஆக்கப்படும் ஓவியங்களை தமிழர் ஓவியம் எனலாம். ஓவியத்தை சித்திரம் என்றும் தமிழில் குறிப்பிடுவர்.

                                               

கணினி உதவு வடிவமைப்பும் வரைதலும்

கணினி உதவு வடிவமைப்பு மற்றும் வரைதல் என்பது கணினி தொடர்பான கருவிகளைப் பயன்படுத்திக், கட்டிடக்கலை, பொறியியல், இயந்திர உற்பத்தி மற்றும் இன்னபிற துறைகளில் வடிவமைப்பு மற்றும் வரைபடம் வரைதலைக் குறிக்கின்றது. இதில் இதற்காக உருவாக்கப்படும் பலவகையான மென் ...

                                               

அமெரிக்க காமிக் புத்தகம்

அமெரிக்க காமிக்சு புத்தகம் இன்றளவும் அமெரிக்காவில் பிரபலமாக வெளிவந்து கொண்டிருக்கும் வரைகதை வெளியீடு ஆகும். இது மெல்லிய காகிதத்தில் அன்றன்றைய காலகட்டத்திற்கு ஏற்பத் தன் சூழ்நிலை மாற்றங்களை மக்களின் மனஓட்டத்தின் வழிகோலாக அமைந்து புதுப்புது வடிவிலு ...

                                               

கால்வினும் ஆபுசும்

கால்வினும் ஆபுசும் பில் வாட்டர்சனால் உருவாக்கப்பட்ட ஒரு ஆங்கிலப் படக்கதை. நாளிதழ்களில் தொடராக வெளியிடப்பட்டு பின்னர் நூல்வடிவிலும் வெளியானது. இது கால்வின் என்ற கற்பனை வளமிக்க ஆறு வயது சிறுவன், ஆபுசு என்ற அவனது பொம்மைப்புலி ஆகிய இரு புனைவுப் பாத்த ...

                                               

டோக்கியோ மியாவ் மியாவ்

டோக்கியோ மியாவ் மியாவ் ரெய்கோ யோஷிடா என்பவரால் எழுதப்பட்டு மியா இகுமி என்பவரால் சித்தரிக்கப்பட்ட ஒரு யப்பானிய shōjo மங்கா தொடர் ஆகும். இது ‘மியாவ் மியாவ் சக்தி’ எனவும் அறியப்படுகிறது. இது முதலில் செப்டம்பர் 2000 இலிருந்து பெப்ருவரி 2003 வரை நகயொஷ ...

                                               

பிளீச் (மங்கா)

பிளீச் டிட்டே கியூபோ என்பவரால் சித்தரிக்கப்பட்டு, கதை எழுதப்பட்டு வரக்கூடிய, ஜப்பாநில் மாங்கா என அழைக்கப்படும் வரைக்கதை ஆகும். பிளீச், இச்சிகோ குரொசாகி என்கிற துடிப்பான இளைஞன், தனக்கு ரூக்கியா கூச்க்கி என்பவளிடமிருந்து கிடைத்த ஆத்மாவை அழிக்கும் ம ...

                                               

மன்ஹ்வா

மன்ஹ்வா என்பது கொரிய மொழியில் வரைகதை மற்றும் கேலிச்சித்திரங்களை குறிக்கும் ஒரு பொதுவான பெயர் ஆகும். மற்ற நாடுகளில் இவ்வார்த்தை பெரும்பாலும் தென் கொரிய வரைகதைகளையே குறிப்பிட பயன்படுகிறது. வட கொரியாவில் வரைகதை துறை தற்போது தான் வளர்ந்து வருகிறது.