ⓘ Free online encyclopedia. Did you know? page 321




                                               

இதய மாற்று அறுவை சிகிச்சை

இதய மாற்றீட்டு சத்திரச் சிகிச்சை அல்லது இதய மாற்று அறுவை சிகிச்சை இதயச் செயலிழப்பின் கடைசி நிலையில் உள்ள ஒருவருக்கு அல்லது தீவிர குருதி ஊட்டக்குறை இதய நோய் உள்ளவருக்கு இன்னொரு மனிதனில் இருந்து பெறப்பட்ட ஆரோக்கியமான இதயத்தை மாற்றீடு செய்யும் சத்தி ...

                                               

உயிரகச்செதுக்கு

இழைய ஆய்வு அல்லது நுள்ளாய்வு அல்லது திசு ஆய்வு என்பது நோய் தாக்கியதாக ஐயுறும் உடலில் இருந்து எடுக்கப்பட்ட பதக்கூற்று உயிர்க்கலங்கள் அல்லது இழையங்களில் நோய்நிலையை அறிய அறுவையர் அல்லது கதிரியலாளர் அல்லது இதயவியலாளர் செய்யும் மருத்துவ ஆய்வாகும். இந் ...

                                               

உறுப்பு நீக்கம்

உறுப்பு நீக்கம் என்பது அறுவைச் சிகிச்சை மூலமாகவோ அல்லது விபத்து, வன்முறையின் மூலமாகவோ உடல் உறுப்புக்கள் உடலில் இருந்து அகற்றப்படுவது ஆகும். ஒருவரை வலியிலிருந்தோ, அல்லது தீவிரமடைந்து வரும் நோயிலிருந்தோ பாதுகாப்பதற்காய் அறுவைச் சிகிச்சை மூலம் உறுப் ...

                                               

ஒட்டுறுப்பு அறுவை மருத்துவம்

ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை என்பது மனித உடலின் பாகங்களை மறுசீரமைப்பு, புனரமைப்பு, மாற்றங்கள் செய்வதனைக் குறிக்கும். இது ஒப்பனை அல்லது அழகியல் அறுவை சிகிச்சை, புனரமைப்பு அறுவை சிகிச்சை, குருதி வடிச்சு அறுவை சிகிச்சை, கை அறுவை சிகிச்சை, நுண்ணுயிரியல ...

                                               

கண்புரை அறுவைச் சிகிச்சை

கண்புரை அறுவை என்பது மாந்தக் கண்ணில் உருவாகிய காட்சி மறைக்கும் இயற்கையான படிக வில்லையை நீக்கும் மருத்துவச் செயல்முறையாகும். அகவை முதிரும்போது வளர்சிதை மாற்றங்களால் படிகவில்லை நாரிழைகளில் கண்புரை உருவாகி அதன் ஒளிபுகும் தன்மையைக் குறைத்து பார்வைக் ...

                                               

குருத்தணு சிகிச்சை

குருத்தணு சிகிச்சை என்பது புதிய, முதிர்ச்சியடைந்த குருத்தணுக்களை, நோய்வாய்ப்பட்ட அல்லது காயங்களைக் கொண்ட பாதிக்கப்பட்டத் இழையங்களில் செலுத்துவதன் மூலம் சிகிச்சையளிக்கும் ஒரு தலையீட்டு மருத்துவ உத்தியாகும். பல மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் குருத்தணு ...

                                               

டிரக்கியோடோமி

டிரக்கியோடோமி என்பது நுரையீரல் அழற்சி மற்றும் மூச்சுக்குழல் அழற்சியால், மூச்சு குழல் சேதமடைவதால் மூச்சுத் திணறல் உள்ளவர்களுக்கு இறுதி கட்ட முயற்சியாக செய்யப்படும் அறுவையுடன் கூடிய மருத்துவ சிகிச்சை முறையாகும். டிரக்கியோடோமி சிகிச்சையின் போது தொண் ...

                                               

புற்றுநோய் அறுவை மருத்துவர்

புற்றுநோய் அறுவை மருத்துவர், புற்றுநோய் கண்ட இடங்களை அறுவை மூலம் அகற்றி மருத்துவம் மேற்கொள்ளும் சிறப்புப் பட்டம் பெற்ற மருத்துவராவார். பண்டைய நாட்களில் அறுவை மருத்துவமே நடைமுறையிலிருந்தது. தொட்டுணரும் வகையிலிருக்கும் புற்றுத் திசுவினையும் இதனைச் ...

                                               

மலக்குடல் இறக்கம்

மலக்குடல் இறக்கம் என்பது ஆசனவாயில் உள்ள சுருக்குதசைகளின் செயலிழப்பால் மலக்குடலோ அல்லது மலக்குடல் கோழைப்படலம் மட்டுமோ வெளியே பிதுங்கிக் கொண்டு நிற்கும் நிலையாகும்.

                                               

மாற்றுக் கல்லீரல் பொருத்துதல்

மாற்றுக் கல்லீரல் பொருத்துதல் என்பது நோயுற்ற கல்லீரல் ஒன்றை மரபணு பகிராத அதே இனத்தைச் சேர்ந்த கொடையாளியின் ஆரோக்கியமான கல்லீரல் ஒன்றினால் மாற்றிப் பொருத்தும் தன்னின ஒட்டு அறுவை சிகிட்சை முறையாகும். நோயுற்ற கல்லீரல் நீக்கப்பட்டு அதே இடத்தில் கொடைய ...

                                               

முகமாற்றுப் பொருத்து

முகமாற்றுப் பொருத்து அல்லது முகமாற்று அறுவைச்சிகிச்சை என்றால் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ ஒருவரது முகத்தை வேறோருவருடைய முகம் கொண்டு மாற்றம் செய்யும் அறுவை மருத்துவம் ஆகும். ஒருவரது முகம் விபத்தில் வெட்டப்பட்டு துண்டாகிய பின்னர் அவரது முகத்தையே ...

                                               

வயிற்றறை உட்காண் அறுவை சிகிச்சை

வயிற்றறை உட்காண் அறுவைச் சிகிச்சை அல்லது உதரத்துட்காண் அறுவைச் சிகிச்சை அல்லது குறைந்தளவு உட்புகும் அறுவைச் சிகிச்சை அல்லது சாவித்துளை அறுவைச் சிகிச்சை, ஓர் தற்கால அறுவை மருத்துவமாகும். இச்செய்முறையில் உடலின் எங்கோவுள்ள சிறு வெட்டு வழியாக தொலைவில ...

                                               

இதய அடைப்பு

இதய அடைப்பு என்பது இதயத்தின் மின்கடத்தலில் உண்டாகும் தடை ஆகும். இதயஅடைப்பும் மாரடைப்பும் வெவ்வேறு. மாரடைப்பு என்பது இதய இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படுவதால் உண்டாவது. மாரடைப்பு நெஞ்சு வலியை உண்டாக்கும். இதய அடைப்போ படபடப்பு, தலைசுற்றல், மயக்கம் ...

                                               

இதய நிறுத்தம்

இதய நிறுத்தம் என்பது இதயத்தின் சுருங்கி விரியும் தொழிற்பாடு திடீரெனத் தடைப்பட்டு குருதிச்சுற்றோட்டம் நிறுத்தப்படுவது ஆகும். இதய நிறுத்தத்திற்குரிய காரணிகளுள் முக்கியமானது கீழ் இதயவறைக் குறுநடுக்கம் ஆகும். இதய நிறுத்தம் மாரடைப்பில் இருந்து வேறுபட் ...

                                               

இதயத்தசை வீக்கம்

இதயத்தசை வீக்கம் என்பது நோய் கிருமிகளின் தோற்றுதலாலோ அல்லது உடற்செயலியல் மாற்றம் ஏற்படுவதலோ இதய தசையில் ஒவ்வாமை ஏற்பட்டு வீக்கமடைத்தல் ஆகும்.நோய் அறிகுறிகள் சுவாசக்கோளாறு, நெஞ்சுவலி, உடற்பயிற்சி திறன் குறைதல், சோர்வு மற்றும், அசாதாரண இதய துடிப்பு ...

                                               

இதயப் புற்றுநோய்

இதயப் புற்றுநோய் என்பது இதயத் தசை உயிரணுக்களில் தோன்றும் ஓர் அரிதான புற்றுநோய் ஆகும். இது முதன்மை இதயக் கட்டி, மற்றும் இரண்டாந்தர இதயக் கட்டி என இரு வகைப்படும். மென்திசுக்களில் தோன்றும் முதன்மைக் கட்டி பொதுவாக ஊறுவிளைவிக்காத சாதாரணக் கட்டியாகவே உ ...

                                               

பிறவி இதயக் குறைபாடு

பிறவி இதய குறைபாடு, பிறவி இதய ஒழுங்கின்மை அல்லது பிறவி இதய நோய் என்றும் அழைக்கப்படுகிறது, இது இதயத்தின் கட்டமைப்பில் உள்ள குறைபாடு அல்லது பிறக்கும்போதே இருக்கும் இதய நாளங்களின் குறைபாடாகும். இதன் அறிகுறிகளும் அடையாளங்களும் குறிப்பிட்ட வகைக் குறைப ...

                                               

இயன்முறை மருத்துவத்திற்கான உலகக் கூட்டமைப்பு

இயன்முறை மருத்துவத்திற்கான உலகக் கூட்டமைப்பு 1951 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது இயன்முறை மருத்துவத்திற்கான உலகின் ஒற்றைக்குரல் ஆகும். இதில் மொத்தம் 110க்கும் மேற்பட்ட உலக நாடுகள் உறுப்பினராக உள்ளன. இதன் மூலம் 450000 இயன்முறை மருத்துவர்கள் உலகமு ...

                                               

உடற் பயிற்சி

உடற் பயிற்சி என்பது உடல் நிலையும் நலத்தையும் மேம்படுத்தும் உடல் செயற்பாடுகள் ஆகும். உடற் பயிற்சி ஒரு நபரின் உடல்நலத்தைப் பாதுகாப்பதுடன் நோயாளியின் உடல்நிலையை சீராக்குகிறது. உடற் பயிற்சி இயன்முறைமருத்துவம்த்தில் பெரும்பங்கு வகிக்கிறது. நடத்தல், ஓட ...

                                               

உடற்பிடிப்பு

உடற்பிடிப்பு செய்யப்படும் பகுதிகளில் ரத்த ஓட்டம் வேகம் பெறுகிறது. அப்பகுதிக்கு அதிக சத்துக்கள் எடுத்துச் செல்லப்படுகிறது. குணமாக்கும் சக்தியும் அதிகரிக்கிறது. ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் ரத்தத்தின் திறன் அதிகரித்து அதன் பயன் கூடுகிறது.

                                               

உயிர்வளிக்கோராப் பயிற்சி

உயிர்வளிக்கோரா பயிற்சி இலாக்டேட்டு உருவாகுமளவில் தீவிரமாகச் செய்யப்படும் உடற் பயிற்சி ஆகும். தாங்காற்றல் தேவையற்ற விளையாட்டுக்களில் பங்கேற்கும் மெய்வல்லுநர்களுக்கு இது பயனாகின்றது; உடல் வலிவைக் கூட்டவும் விரைவையும் ஆற்றலையும் மேம்படுத்தவும் பயனாக ...

                                               

உயிர்வளிக்கோரும் பயிற்சி

உயிர்வளிக்கோரும் பயிற்சி அல்லது இதயப் பயிற்சி ஆற்றலை-உருவாக்க உயிர்வளியைக் கோரும் செயல்முறையை முதன்மையாகக் கொண்ட உடற் பயிற்சி ஆகும்; இது குறைந்தளவு முதல் உயரளவு வரை தீவிரமானதாயிருக்கலாம். இதனைக் குறிப்பிடும் ஆங்கிலச் சொல்லான ஆரோபிக் என்பதற்கு பொத ...

                                               

உலக இயன்முறை மருத்துவ தினம்

உலக இயன்முறை மருத்துவ தினம் உலகளவில் உள்ள இயன்முறை மருத்துவர்களால் கொண்டாடப்படுகிறது. இத் துறையை சார்ந்தவர்கள் மக்களிடையே இயன்முறை மருத்துவத்தைப்பற்றி அதன் நன்மைகளையும் நுட்பங்களையும் எடுத்து சொல்கின்றனர். மக்களுக்கு உடலியக்கம், தசை பலம் பாதுகாத் ...

                                               

கால்வானிக் சிகிச்சை

கால்வானிக் சிகிச்சை இயன்முறைமருத்துவ துறையில் பயன்படுத்தப்படும் ஒரு சிகிச்சை முறை ஆகும். இது மின்னாற்றல் மூலம் வழங்கப்படும் மின்னாற்றல் சிகிச்சையின் ஒரு பிரிவு ஆகும்.

                                               

குப்பிச் சிகிச்சை

இச்சிகிச்சை தற்பொழுது நடைமுறையில் இருக்கலாம். ஆனால் இது புதியது அல்ல. இது பண்டைய தமிழர், எகிப்திய, சீன, மற்றும் மத்திய கிழக்கு கலாச்சாரங்களில் இருந்துள்ளது. உலகிலேயே பழமையான மருத்துவ பாடப்புத்தகங்களில் ஒன்றான எபேர்ஸ் பாப்பிரஸ்சில் குறிப்பிடப்பட்ட ...

                                               

சதை ஆற்றல் நுட்பச் சிகிச்சை

சதை ஆற்றல் நுட்பச் சிகிச்சை) என்பது கைநுட்பச் சிகிச்சையின் ஒரு முக்கியமான சிகிச்சை முறை ஆகும். இம்முறை மூட்டு அசைவு சரி செய்யவும், தசை பிடிப்பு, தசை பலகீனம் மற்றும் இவைகளால் ஏற்படும் வலிகளை சரி செய்யவும் பெரும்பாலும் இயன்முறைமருத்துவர், உடற்பிடிப ...

                                               

தசை தூண்டுதல் மின் சிகிச்சை

தசை தூண்டுதல் மின் சிகிச்சை என்பது மின்னாற்றல் சிகிச்சையின் ஒரு வகையாகும். மின் தூண்டுதல் என்ற மின்சாதன பொருளைக் கொண்டு மருத்துவ சிகிச்சை வழங்கும் முறை ஆகும். இது இயன்முறை மருத்துவ பிரிவில் பயன்படுத்தப்படுகிறது.

                                               

தசைதிசுப்படலச் சிகிச்சை

தசைதிசுப்படலச் சிகிச்சை என்பது இயன்முறைமருத்தும் என பல வகையான மருத்தவ முறையில் தசை மற்றும் திசுப்படலம் சார்ந்த குறைபாடுகளுக்கு வழங்கப்படும் கைநுட்பச் சிகிச்சை வகை ஆகும். இது தசைதிசுவின் இலகுத்தன்மை, இயக்கம், பிடிப்பு, தழும்பு மற்றும் இறுக்கம் ஆகி ...

                                               

நீர்ச்சிகிச்சை

நீர்சிகிச்சை என்பது மாற்று மருத்துவம் ஆகும். குறிப்பாக இயற்கை மருத்துவம், தொழில்முறைமருத்துவம் மற்றும் இயன்முறைமருத்துவங்களில் ஒரு பகுதியாகும்.இது ஒரு வலி நிவாரண சிகிச்சை முறை ஆகும்.

                                               

பேராடிக் சிகிச்சை

1970 ஆம் ஆண்டுகளில் இந்த சிகிச்சை முறை ஆரம்பிக்கப்பட்டது. பேராடிக் சிகிச்சையில் அதன் மின்சாதனத்தின் இரு எதிரெதிர் மின் முனைகளில் இருந்து வரும் நேர்மின் மற்றும் எதிர்மின் கடத்திகள் உடலில் உள்ள பெரிய தசைகளில் அதற்கான இடத்தின் தோல் மேல் நீர் அல்லது ...

                                               

மெழுகு சிகிச்சை

மெழுகு சிகிச்சை என்பது மெழுகினைப் அல்லது மெழுகு ஒத்தடம் பயன்படுத்தி உடலில் ஏற்படும் சில மருத்துவ குறைபாடுகளை சரி செய்ய உதவும் சிகிச்சை முறை ஆகும். இது மெழுகுக்குளியல் எனவும் அழைக்கப்படுகிறது. இது இயன்முறைமருத்துவ துறையில் பயன்படுத்தப்படுகிறது.

                                               

எச்.ஐ.வி

எச்.ஐ.வி அல்லது மனித நோயெதிர்த்திறனழித் தீநுண்மம் எனப்படுவது எய்ட்சு நோயை உருவாக்கும் ரெட்ரோவைரசு வகை தீ நுண்மம் ஆகும். இந்த வைரசு தாக்கும்போது, மனிதரில் இயற்கையாக இருக்கும் நோய் எதிர்ப்புத் திறனில் குறைபாடு ஏற்பட்டு, அந்த குறைபாட்டின் காரணமாக நோ ...

                                               

கடிய கதிர்வீச்சு நோய்க்கூட்டறிகுறி

கடிய கதிர்வீச்சு நோய்க்கூட்டறிகுறி) அல்லது கதிர்வீச்சு நச்சுமை அல்லது கதிர்வீச்சு நோய் என அழைக்கப்படும் நோயானது மிகையான அளவு அயனாக்கக் கதிர்வீச்சின் வெளிப்பாட்டினால் ஏற்படும் பல நோய் அறிகுறிகளைச் சேர்ந்த உடல்நல பாதிப்பு ஆகும். இந்நோயால் நீண்ட கால ...

                                               

கடிய சிறுநீரகக் காயம்

கடிய சிறுநீரகக் காயம், முன்னதாக கடிய சிறுநீரகச் செயலிழப்பு, என்பது மிக விரைவான சிறுநீரகச் செயலிழைப்பைக் குறிக்கும். இதன் காரணங்கள் பலவாயினும் குருதியின் அளவு குறைதல், சிறுநீரகத்திற்கு தீங்கு விளைவிக்கின்ற பொருட்களுக்கு வெளிப்படுத்தல், சிறுநீர்ப்ப ...

                                               

கருங் காய்ச்சல்

கருங் காய்ச்சல் Visceral leishmaniasis, காலா அசார் என்னும் அறியப்படுவது, black fever, மற்றும் Dumdum fever, லெஷ்மேனியாசிசின் கடுமையான வடிவம் மற்றும், முறையான நோயறிதல் மற்றும் சிகிச்சை இல்லையானால், அதிக உயிரிழப்பு ஏற்படும் நோய்களில் ஒன்று. கருங் க ...

                                               

கரோஷி

கரோஷி என்பது ஒரு சப்பானிய மொழிச் சொல்லாகும். இதை "பணிச்சுமை மரணம்" என மொழிபெயர்க்கலாம். இது கூடுதலான பணிச்சுமையினால் ஏற்படும் மரணத்தைக் குறிக்கிறது. கரோஷி மரணங்களின் முதன்மைக் காரணங்களாக மன அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை உள்ளன. தென் கொரிய ...

                                               

கறுப்புச் சாவு

கறுப்புச் சாவு என்பது 1348 தொடக்கம் 1350 வரை ஐரோப்பாவில் பரவிய ஒரு தொற்று நோய். இது மனித வரலாற்றிலே மிகவும் கெடுதியாக அமைந்த தொற்று நோய்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது பாக்டீரியாத் தொற்றினால் ஏற்பட்ட பிளேக் என்றே பரவலாக நம்பப்படுகிறது. இது சீன ...

                                               

கொலை

கொலை என்பது ஒரு மனிதரை இன்னொரு மனிதர் கொல்வது அல்லது மரணம் அடையச் செய்வதாகும். பொதுவான சூழ்நிலைகளில் கொலை ஒரு குற்றச்செயலாகவே கருதப்படுகிறது. ஆனால் போர், எதிர்ப்புப் போராட்டம் போன்ற சூழ்நிலைகளில் கொலை தொடர்பான ஒரு தெளிவான அற நிலைப்பாடு கடினமானது.

                                               

தாய்மார்கள் இறப்பு விகிதம்

தாய்மார்கள் இறப்பு விகிதம் என்பது உலகெங்கிலும் உள்ள நாடுகளில் பிரசவத்திற்கு முன்னும், பிறகும் தாய்மார்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு ஒரு முக்கிய செயல்திறன் காட்டியாகும். பொதுவாக இது எம்.எம்.ஆர் என்று குறிப ...

                                               

நீர்ப்போக்கு

நீர்ப்போக்கு உடல் நீரின் மிதமிஞ்சிய இழப்பாக வரையறுக்கப்பட்டுள்ளது. நேர்ப்பொருளாகப் பார்த்தால் ஒரு பொருளிலிருந்து நீரை வெளியேற்றுதல் என்று பொருள்படும், எனினும் உடலியக்கப் பொருளில் பார்த்தால், ஒரு உயிர்ப்பொருளின் உள்ளுக்குள்ளேயான திரவப் பற்றாக்குறை ...

                                               

பக்கவாதம்

பக்கவாதம் அல்லது பாரிசவாதம் என்பது மூளைக்குக் குருதியைக் கொண்டு செல்லும் குழாய்களில் தடை ஏற்படுவதனால் மூளைக்குக் குருதி செல்வது தடைப்பட்டு மூளையின் செயற்பாடுகள் மிகவிரைவாக இழக்கப்படுவதைக் குறிக்கும் குருதி உறைதல், குழலியக்குருதியுறைமை போன்றவற்றால ...

                                               

மாந்தர் தாமாகப் பற்றி எரிதல்

உயிருள்ள மனிதர்கள் சில வேளைகளில் எந்தவொரு தீ மூட்டியும் இல்லாமல் எரிந்து சாம்பலாகிவிடுவதாக நம்பப்படும் நிகழ்வை மாந்தர் தாமாகப் பற்றி எரிதல் என்பர். வரலாற்றில் கடந்த 300 ஆண்டுகளில் 200 நிகழ்வுகள் இவ்வாறானவை என்று சுட்டப்பட்டாலும், அவற்றில் பெரும்ப ...

                                               

மாரடைப்பு

இதயத்தின் பகுதிகளுக்குக் குருதியோட்டம் தடைப்படும்போது இதயத்திசு இறப்பு அல்லது இதயத்தசை இறப்பு ஏற்படுகிறது. இது பெரும்பாலும் முடியுருத் தமனியில் தடையோ குறுக்கமோ ஏற்படுவதால் உண்டாகிறது. இத் தமனிகளின் சுவர்களில் கொலஸ்டிரால் போன்ற கொழுப்புப் பொருட்கள ...

                                               

மூளைச்சேதம்

மூளைச் சேதம் அல்லது மூளை காயம் என்பது மூளை செல்கள் அழிதல் அல்லது சிதைவடைதலைக் குறிக்கிறது. மூளை காயங்கள் பொதுவாக உள் மற்றும் வெளிப்புற காரணிகளால் ஏற்படுகின்றன. எதிர்பாராத அதிர்ச்சியால் தூண்டப்பட்ட வலுவடைந்த நரம்பு சேதத்தினால் பரவலான மூளைச் சேதம் ...

                                               

மனித உடல்

உயிரியலில் மனித உடல் என்பது மனிதனின் முழுமையான கட்டமைப்பாகும். இது பல்வேறுபட்ட உயிரணுக்களையும், ஒரே வகை உயிரணுக்கள் இணைந்து உருவாகும் இழையங்களையும், இழையங்களின் கூட்டால் உருவாகும் உடல் உறுப்புக்களையும், உறுப்புக்கள் இணைந்து உருவாக்கும் மண்டலம் அல ...

                                               

இடை

மனித உடலின் இடை வடிவம் பாலினத்தை பொருத்து வேறுபடுகிறது.பெண்களின் இடையின் மேற்பகுதி சிறுத்தும் கீழ்பகுதி விரிந்தும் உள்ளது. இதன் காரணமாக பெண்களின் பின் பக்கம் ஆண்களை விட சற்று பெருத்து காணப்படுகிறது. பெண்கள் பூப்படையும்போது நடைபெறும் உடல் மாற்றங்க ...

                                               

இண்டர்சிசியம்

இண்டர்சிசியம் மார்ச் மாதம், 2018-ஆம் ஆண்டில் புதிதாக அறியப்பட்ட மனித உறுப்பாகும். இண்டர்சிசியம், மனிதத் தோல் மற்றும் உள்ளுறுப்புகளான தசைகள் மற்றும் சுற்றோட்டத் தொகுதி உள்ளிட்ட பகுதிகளுக்கு இடையே உள்ளப் பகுதிகளில் திரவம் நிறைந்த பொருளாக, செல் சுவர ...

                                               

உள்ளங்கை

உள்ளங்கை என்பது கையின் தொடக்கப் பகுதியில் அமைந்துள்ள, உட்பக்கப் பகுதி ஆகும். இதன் நுனியில் கைவிரல்களும், மறுமுனையில் மணிக்கட்டும் அமைந்துள்ளது. இதன் மறுபக்கத்தை, புறங்கை என்று அழைப்பர். உடலின் வெளிப்புறத்தில் உள்ளங்கை இருந்தாலும், புறங்கையை விட, ...

                                               

கால்

கால் என்பது விலங்குகளின் உடலைத் தாங்குவதற்கும், நடப்பதற்கும் பயன்படும் உடல் உறுப்பாகும். விலங்குகளுக்குக் கால்கள் சோடிகளாக அமைந்துள்ளன. மனிதரும் பறவைகளும் இரு கால்களும் விலங்குகள் நான்கு கால்களும் கொண்டிருக்கின்றனர். சில ஊர்வன வகைகள் சில நூறு கால ...

                                               

குரல்வளை

குரல்வளை என்பது, பாலூட்டிகளின் கழுத்துப் பகுதியில் காணப்படுகின்ற ஓர் உறுப்பாகும். இது, மூச்சுக் குழலுக்குப் பாதுகாப்பாக இருப்பதுடன், ஒலி உருவாக்கத்துக்கும் உதவுகிறது. குரல்வளை குரல் மடிப்புக்களைத் தன்னுள் அடக்கியிருப்பதுடன், தொண்டைக் குழாய், உணவு ...