Back

ⓘ பெத் ஃபீனிக்ஸ். எலிசபெத் கோப்லாண்ட் ஒரு அமெரிக்க தொழில்முறை மல்யுத்த வீரர் மற்றும் வர்ணனையாளர் ஆவார், அவரது மேடைப் பெயர் பெத் பீனிக்ஸ் மூலம் பரவலாக அரியப்பட்டார ..
பெத் ஃபீனிக்ஸ்
                                     

ⓘ பெத் ஃபீனிக்ஸ்

எலிசபெத் கோப்லாண்ட் ஒரு அமெரிக்க தொழில்முறை மல்யுத்த வீரர் மற்றும் வர்ணனையாளர் ஆவார், அவரது மேடைப் பெயர் பெத் பீனிக்ஸ் மூலம் பரவலாக அரியப்பட்டார் இவர் தற்போது உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம் உடன் கையெழுத்திட்டார் மற்றும் என் எக்ஸ் டி நிறுவனத்தில் வர்ணனையாளராக செயல்படுகிறார். ஒரு மல்யுத்த வீரராக, இவர் முன்னாள் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம் டிவாஸ் வாகையாளர், மூன்று முறை உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம் மகளிர் வாகையாளராகவும், மற்றும் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம் ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்ட இளைய நபர் ஆவார்.

ஃபீனிக்ஸ் பள்ளிப்பருவ காலங்களில் நடைபெற்ற அமெச்சூர் மல்யுத்தப்போட்டிகளில்பல வெற்றிகளைப் பெற்றுள்ளார். பின் இவர் ஆல் நைட்டர்சிடம் பயிற்சி பெற்றார்.

மே 2001 இல் அறிமுகமான பிறகு, இவர் பல சுயாதீன விளம்பரங்களுக்காக மல்யுத்தம் செய்தார். ஷிம்மர் பெண்கள் தடகளத்தின் துவக்க நிகழ்ச்சிகளிலும் இவர் தோன்றினார். 2004 ஆம் ஆண்டில், இவர் ஓஹியோ பள்ளத்தாக்கு மல்யுத்தத்தில் OVW பணியாற்றத் தொடங்கினார், மேலும் அக்டோபர் 2005 இல் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம் உடன் ஒரு மேம்பாட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இவர் மே 2006 இல் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தின் ரா பிரிவில் அறிமுகமானார், ஆனால் அடுத்த மாதம் நடைபெற்ற ஒரு போட்டியில் இவரின் தாடையில் காயம் ஏற்பட்டது. இதன் விளைவாக, இவர் பல அறுவை சிகிச்சைகள் செய்து மேலதிக பயிற்சிக்காக ஓஹியோ பள்ளத்தாக்கு மல்யுத்தப் போட்டிக்கு திரும்பினார். அங்கு இருந்தபோது, இவர் ஓஹியோ பள்ளத்தாக்கு மல்யுத்தப் போட்டிம களிர் வாகையாளர் பட்டத்தினை இரண்டு முறை வென்றார், இருப்பினும் அவரது இரண்டாவது பங்கெடுப்புக் காலமானது ஓஹியோ பள்ளத்தாக்கு மல்யுத்தப் போட்டியால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை.

ஜூலை 2007 இல் இவர் ரா பிராண்டிற்குத் திரும்பினார், பின் டபிள்யுடபிள்யுஇ திவாஸில் போட்டிகளில் கவனம் செலுத்தினார். அங்கு "தி கிளாமசோன்" என்ற புனைப்பெயரைப் பெற்றார். அக்டோபரில் நோ மெர்சி எனும் காட்சிக்கு காசு நிகழ்ச்சியில் தனது முதல் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம் மகளிர் வாகையாளர் பட்டத்தினை வென்றார், மேலும் அந்தப் பட்டத்தினை ஆறு மாதங்கள் இவர் தக்கவைத்துக் கொண்டார்.பின்னர் இவர் "கிளாமரெல்லா" என்று அழைக்கப்படும் சாண்டினோ மாரெல்லாவுடன் திரையில் ஒரு உறவை வளர்த்துக் கொண்டார், மேலும் ஆகஸ்ட் 2008 இல் மகளிர் வாகையாளர் பட்டத்தினை இரண்டாவது முறையாக வென்றார், ஜனவரி 2009 வரை வைத்திருந்தார். ஜனவரி 2010 இல், ராயல் ரம்பிளில், இந்த நிகழ்வின் வரலாற்றில் ஆண்கள் ராயல் ரம்பிள் போட்டியில் நுழைந்த இரண்டாவது பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார், மேலும் ஏப்ரல் மாதத்தில் மூன்றாவது முறையாக மகளிர் வாகையாளர் பட்டத்தினை வென்றார், அதை ஒரு மாதம் வைத்திருந்தார். அக்டோபர் 2011 இல், பீனிக்ஸ் முதல் முறையாக உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம் திவாஸ் வாகையாளர் பட்டத்தினை வென்றார். ஆனால் ஏப்ரல் 2012 இல் அதனை இழந்தார்.

                                     

1. ஆரம்ப கால வாழ்க்கை

எலிசபெத் கோசியாஸ்கி நியூயார்க்கின் எல்மிராவில் பிறந்து போலந்து பெற்றோரால் வளர்க்கப்பட்டார். இவர் பதினொரு வயதாக இருந்தபோது, உலக மல்யுத்த சம்மேளனத்திற்கான தொலைக்காட்சியில் பங்கேற்கும் பரிசிற்கான போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றார். இவர் பிரெட் ஹார்ட், ஓவன் ஹார்ட் மற்றும் டெட் டிபியாஸ் ஆகியோரை தனது விருப்பமான மல்யுத்த வீரர்களாக மேற்கோள் காட்டுகிறார். கோசியாஸ்ஸ்கி எல்மிராவில் உள்ள நோட்ரே டேம் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார், அங்கு இவர் டென்னிஸ் போட்டியில் கலந்துகொண்டார். இவர் தனது மூத்த ஆண்டில் இசைவிருந்து ராணியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கோசியாஸ்ஸ்கி நியூயார்க்கின் பஃபேலோவில் உள்ள கனீசியஸ் கல்லூரியில் பட்டம் பெற்றவர், குற்றவியல் நீதி மற்றும் மக்கள் தொடர்பு பிரிவுகளில் இளங்கலை பட்டம் பெற்றவர். ஓஹியோ பள்ளத்தாக்கு மல்யுத்தப் போட்டியில் மல்யுத்தத்தில் இருந்தபோது, கோசியாஸ்கி எல்மிராவில் உள்ள லைட்ஸ் பேக்கரி மற்றும் காபி ஷாப் என அழைக்கப்படும் உள்ளூர் உணவகத்தில் பணியாளராக பணியாற்றினார்.

                                     
  • பங க ற க ம ற அழ ப ப வ ட க க, அங க க ள மற ற ம டப ள ய டப ள ய ஈ த வத ப த ஃப ன க ஸ ஆக ய ர ல த க கப பட ட ர ந க ஸ வ ல க ள வ ட க க வ ள ய ட ட ம க கவர ய

Users also searched:

...