Back

ⓘ இயற்கை என்பது இயல்பாக இருக்கும் தோற்றப்பாடு என்னும் பொருள் கொண்டது. இயல்பாகத் தோன்றி மறையும் பொருட்கள், அவற்றின் இயக்கம், அவை இயங்கும் இடம், இயங்கும் காலம் ஆகிய ..
                                               

உள்ளூர் உடல்நல மரபுகள் மீட்டுயிர்ப்பு நிறுவனம்

உள்ளூர் உடல்நல மரபுகள் மீட்டுயிர்ப்பு நிறுவனம் பெங்களூரு வை அடுத்த யெலஹங்காவில் அமைந்துள்ள ஒரு பொது அறக்கட்டளையும் அற நிறுவனமும் ஆகும். இது 1993 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட பல துறை, துறை-சார் நிறுவனங்களின் உதவியுடன் நடத்தப்பட்டு வருகிறது இந்நிறுவனம்.

                                               

பல் வெளுப்பாக்கம்

பல் வெளுப்பாக்கம் என்பது பற்களில் ஏற்படக்கூடிய கறைகளைப் போக்கி அவற்றை வெண்மை ஆக்குவதற்காக பொதுப் பல்மருத்துவத்தில் கையாளப்படும் ஒரு முறையாகும். இதனைப் பல் வெண்மையாக்கம் என்றும் கூறலாம். சிறப்பாக இது அழகூட்டல் பல்மருத்துவத் துறையிலேயே பெரிதும் பயன்படுகின்றது. குழந்தைகளின் உதிர் பற்கள், வளர்ந்தோரின் பற்களை விட வெண்மையானவை. அத்துடன், பற்களின் கனிமக் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்களினால் பல்மிளிரியின் நுண்துளைத் தன்மை குறைவதால் வயது ஏறும்போது பற்களின் நிறமும் கடுமை அடைகின்றது. பக்டீரியத் துகள்கள், உணவுப் பொருட்கள், புகையிலை போன்றவற்றாலும் பற்களில் கறைபடிவதுண்டு. டெட்ராசைக்கிளின் போன்ற சில நுண்ண ...

                                               

ஒல்லியான தவளை

ஒல்லியான தவளை என்பது மைக்ரோஹையலிடே தவளை குடும்பத்தினைச் சார்ந்த ஓர் சிற்றினமாகும். இது ஆஸ்திரேலியா மற்றும் நியூ கினியாவில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல வறண்ட காடுகள், மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல சதுப்புநிலங்கள், ஈரமான புன்னிலம், ஆறுகள் மற்றும் இடைப்பட்ட ஆறுகள்.

                                               

தரவுகள் போதாது

தரவுகள் போதாது இனங்கள் என்பது பன்னாட்டு இயற்கை பாதுகாப்புச் சங்கம் வகைப்படுத்தப்பட்டுள்ளது இனங்களில் ஒன்றாகும். இது பாதுகாப்புச் செய்யப்பட வேண்டிய இனத்திற்கானகாப்பு நிலையை முறையாக மதிப்பிடுவதற்கு போதுமான தகவல்கள் இல்லை என்பதாகும். இதில் உள்ள இனங்கள் குறித்து விரிவான ஆய்வு செய்யப்படவில்லை என்பதை இது குறிக்கவில்லை; ஆனால் உயிரினங்களின் குறைவான அல்லது எந்த தகவலும் இந்த இனங்களின் செறிவு மற்றும் பரவல் குறித்துக் கிடைக்கவில்லை என்பதை இது குறிக்கிறது. ஐயுசிஎன்" தரவுகள் போதாது” என இனங்களைப் பதிவு செய்யும்போது கவனமாகப் பதிவிட வேண்டுகிறது. "ஒரு இனத்தின் வரம்பு ஒப்பீட்டளவில் குறுகியதாக இருப்பதாக சந்தே ...

                                               

ஆசியச் சாம்பல் மூஞ்சூறு

Bilateria ஆசியச் சாம்பல் மூஞ்சூறு என்பது சோரிசிடே குடும்பத்தினைச் சார்ந்த பாலூட்டியாகும். இது பூட்டான், கம்போடியா, சீனா, இந்தியா, இலாவோசு, மலேசியா, மியான்மர், நேபாளம், பாக்கித்தான், பிலிப்பீன்சு, தாய்லாந்து மற்றும் வியட்நாமில் காணப்படுகிறது. இப்பகுதியில் காணப்படும் பொதுவான உயிரினங்களில் ஒன்றாக உள்ளது. இதனைப் பன்னாட்டு இயற்கை பாதுகாப்புக்கான சங்கம் தீவாய்புக் கவலை குறைந்த இனமாக மதிப்பிட்டுள்ளது.

                                               

செம்பட்டியல் சுட்டெண்

செம்பட்டியல் சுட்டெண் என்பது பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கஅச்சுறுத்தப்பட்ட உயிரினங்களின் அடிப்படையில் உலகளாவிய உயிரியற் பல்வகைமை மாறுபடும் நிலையின் ஒரு குறி காட்டியாகும். இது முக்கிய இனக் குழுக்களின் காப்பு நிலையை வரையறுக்கிறது. மேலும் காலப்போக்கில் அழிந்துபோகும் அபாயத்தின் போக்கினையும் அளவிடுகிறது. பாதுகாப்பு மதிப்பீடுகளை முறையான இடைவெளியில் நடத்துவதன் மூலம், வகைபிரித்தல் குழுவில் உள்ள உயிரினங்களின் அச்சுறுத்தல் நிலையில் ஏற்படும் மாற்றங்கள் அழிவு அபாயத்தின் போக்குகளைக் கண்காணிக்க இது பயன்படும். ஒவ்வொரு குழுக்களிலும் உள்ள உயிரினங்களுக்கான அச்சுறுத்தல் நிலையில் மாற்றங்களைப் பயன்படுத்தி ப ...

இயற்கை
                                     

ⓘ இயற்கை

இயற்கை என்பது இயல்பாக இருக்கும் தோற்றப்பாடு என்னும் பொருள் கொண்டது. இயல்பாகத் தோன்றி மறையும் பொருட்கள், அவற்றின் இயக்கம், அவை இயங்கும் இடம், இயங்கும் காலம் ஆகியவை அனைத்தையும் இணைத்து இயற்கை என்கின்றோம். உயிரினம், உயிரின அறிவு போன்றவையும் இயற்கையில் அடங்கும். பொதுவாக இயற்கையை ஆய்வு செய்வதென்பது அறிவியலின் மிகப்பெரிய ஒரு பகுதியாகும். மனிதர்களும் இயற்கையின் ஒரு பகுதியே ஆவர். மற்ற இயற்கை நிகழ்வுகளிலிருந்து மனிதனின் நடத்தைகள் முற்றிலும் வேறுபட்ட தனியான ஒரு பிரிவு என்று பெரும்பாலும் கருதப்படுகிறது. இயற்கை என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில் நேச்சர் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. நேட்சுரா என்ற இலத்தீன் சொல்லின் அடிப்படையில் தருவிக்கப்பட்டதுதான் நேச்சர் என்ற ஆங்கில சொல்லாகும். இதன் பொருள் அவசிய குணங்கள், பிறவிக்குணம் என்பதாக அறியப்படுகிறது. பண்டைய இலக்கியங்களில் பிறவி அல்லது பிறப்பு என்று இதற்கு பொருள் கொள்ளப்பட்டிருந்தது.

கிரேக்க சொல்லான பிசிசு என்பதின் இலத்தீன் மொழிபெயர்ப்பே நேச்சுரா என்பதாகும். தாவரங்கள், விலங்குகள், மற்றும் உலகிலுள்ள பிற உயிரினங்கள் அனைத்தும் தங்கள் சொந்த விருப்பத்தில் உருவாக்கிக் கொள்ளும் உள்ளார்ந்த பண்புகளுடன் இச்சொல் தொடர்புடையதாகும்.

ஒட்டுமொத்தமாய் இயற்கை என்பது அண்டத்தின் இயற்பியல் என்று கருதப்படுகிறது. அண்டத்தின் இயற்பியல் என்ற சொல் பல்வேறு வகைகளில் விரிவான பொருள்களைக் கொண்டது ஆகும். இவையாவும் படிப்படியாக வளர்ந்து நன்மதிப்பையும் நம்பகத்தன்மையையும் பெற்று அழியாமல் நிலைத்திருக்கின்றன. கடந்த பல நூற்றாண்டுகளில் நவீன அறிவியல் முறைகளிலும் அண்டத்தின் இயற்பியல் என்ற பொருளின் பயன்பாடு அதிகரித்தவண்னம் உள்ளது.

நேச்சர் என்ற சொல்லின் பல்வேறு பயன்பாடுகளுக்கு மத்தியில் இச்சொல்லின் பொருள் பெரும்பாலும் நிலவியல் மற்றும் வனவியல் என்ற பொருள்களையும் குறிப்பதாக உள்ளது. தாவரங்கள் மற்றும் விலங்குகள் வாழும் பொது உலகத்தை இயற்கை என்ற சொல் குறிப்பதாகவும் கருதலாம். மற்றும் சில சந்தர்ப்பங்களில் உயிரற்ற பொருட்களுடன் தொடர்புடைய செயல்முறைகளுக்கு, அதாவது புவியின் வெப்பநிலை மற்றும் நிலவியல் போன்றவற்றுக்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட வகை பொருட்கள் எவ்வாறு நிலைபெறுகின்றன மற்றும் அச்செயல்முறைகளுக்கேற்ப எவ்வாறு அவை தம்மை மாற்றிக் கொள்கின்றன என்பது தொடர்பான கருத்துகளையும் உள்ளடக்கியதாக இயற்கை பொருள் கொள்ளப்படுகிறது.

இது பெரும்பாலும் "இயற்கைச் சூழல்" அல்லது வனாந்தர-காட்டு விலங்குகள், பாறைகள், காடு என்ற பொருளைக் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. பொதுவாக மனித இடையீட்டினால் மிகுதியாக மாற்றியமைக்கப்படாத பகுதி என்றும், அல்லது அந்தப்பகுதிகளில் மனித தலையீடு நிகழாத பகுதியாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. உதாரணமாக, உற்பத்தி பொருள்களும் மனித தொடர்புகளும் பொதுவாக இயற்கையின் பகுதியாக கருதப்படுவதில்லை. இயற்கை இயற்பியல் உலகின் தோற்றப்பாடுகளையும், உயிர்வாழ் இனங்களையும் குறிக்கிறது. இயற்கை மற்றும் செயற்கை என்ற கோட்பாட்டின் அடிப்படையில் பண்டைய காலம் முதல் இன்றுவரை இயற்கை புரிந்து கொள்ளப்பட்டு வந்துள்ளது. இது, அணுவிலும் சிறிய துகள்கள் சார்ந்தனவாகவோ அல்லது நாள்மீன்பேரடைகளைப் போல் மிகப் பெரிய அளவு சார்ந்தனவாகவோ இருக்கலாம்.

                                     

1. பூமி

உயிரினங்களின் வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்கும் ஒரே கிரகம் பூமி மட்டுமேயாகும்., இதன் இயற்கை அம்சங்கள் அறிவியல் ஆராய்ச்சியின் பல துறைகளுக்கு வித்திடுகின்றன. சூரிய மண்டலத்தில் உள்ள கோள்களில் இது சூரியனிலிருந்து மூன்றாவது நெருக்கமான ஒன்றாகவும், பாறைகள் நிரம்பிய நிலப்பகுதியைக் கொண்ட இப்பெரிய உட்கிரகம் ஒட்டுமொத்த அளவில் ஐந்தாவது பெரிய கிரகமாகவும் உள்ளது. இரண்டு பெரிய துருவப் பிரதேசங்கள், ஒப்பீட்டளவில் இரண்டு குறுகிய மிதவெப்ப மண்டலங்கள், அயன மண்டலம் முதல் நில நடுக்கோட்டு வெப்ப மண்டலம் வரை பரந்த காலநிலைகளைப் பெற்றிருப்பது புவியின் முக்கியமான சிறப்பு அம்சங்களாகும். அமைந்திருக்கும் இடவமைப்பைப் பொறுத்து மழைப்பொழிவு ஒரு மில்லிமீட்டருக்கு கீழிலிருந்து பல மீட்டர்கள் வரை பரவலாக வேறுபடுகிறது. 71 சதவீத பூமியின் மேற்பரப்பு உப்பு நீர் நிரம்பிய கடல்களாகவும், எஞ்சிய பகுதி வட கோளத்தில் வசிப்பதற்கு ஏற்ற நிலப்பகுதிகளான கண்டங்கள், தீவுகள் முதலியவற்றையும் கொண்டுள்ளது.

அசல் தோற்ற நிலைமையின் தடயங்களுடன், புவியியல் மற்றும் உயிரியல் செயல்முறைகள் மூலம் பூமி உருவாகியுள்ளது. படிப்படியாக புலம்பெயரும் பல புவிப்பாறை தகடுகளால் வெளி மேற்பரப்பு பிரிக்கப்பட்டுள்ளது. கன அடுக்கினால் ஆன நெகிழும் காப்புறையும், காந்தமண்டலத்தை உருவாக்கும் இரும்பு நிரம்பிய உள்ளகமும் கொண்டு உட்புறம் செயல்திறன் மிக்கதாக உள்ளது. உட்புறம் திடமான உட்கருவாலும், திரவநிலை வெளிப்புறமும் சேர்ந்து புவியின் இரும்பு உள்ளகம் உருவாக்கியுள்ளன. மைய உள்ளகத்தில் காணப்படும் வெப்பச்சலன இயக்கத்தால் நீரோட்டங்களும், புவிகாந்தப்புலமும் உருவாகின்றன.

உயிரின வாழ்க்கை வடிவங்களால் வளிமண்டலத்தின் தொடக்க கால நிலைமையில் கணிசமான நிலைமாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதன் மூலம் சுற்றுச்சூழல் சமநிலையும், மேற்புற உறுதித்தன்மையும் உருவாகின்றன. அட்சரேகை மற்றும் பிற புவியில் காரணிகளால் காலநிலையில் பரந்த பிராந்திய வேறுபாடுகள் இருந்தாலும், நீண்ட கால சராசரி உலக காலநிலை உறைபனிக்குள்ளான காலங்களில் மிகவும் நிலையானதாகவும் வெப்பநிலை வேறுபாடுகள் கொண்டும் இருந்துவந்துள்ளது. இவ்விரண்டு வேறுபாடுகளும் சுற்றுச்சூழல் சமநிலை வரலாற்றில் முக்கிய விளைவுகளையும், புவியின் உண்மையான புவியியலையும் உருவாக்கியுள்ளன.

                                     

1.1. பூமி நிலவியல்

பூமியின் கட்டமைப்பை உருவாக்கியுள்ள திட மற்றும் திரவப் பொருட்களைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளும் அறிவியியல் பிரிவே நிலவியல் எனப்படும். புவி அறிவியல் பிரிவான இத்துறை புவியின் கூட்டமைவு, கட்டமைப்பு, இயற்பியல் இயல்புகள், வரலாறு, மற்றும் அதனை உருவாக்கிய வழிமுறைகள் என்பவை தொடர்பான செய்திகளை ஆராய்கிறது. புவியில், நிலநெய், நிலக்கரி மற்றும், இரும்பு, செம்பு, யுரேனியம் போன்ற உலோகங்கள் மற்றும் இயற்கை வளங்கள் இருக்கும் இடங்களை அடையாளம் காண வும் உதவுகின்றது. மேலும், விலையுயர்ந்த இரத்தினக் கற்கள் மற்றும் கல்நார், மைக்கா, பாசுப்பேட்டுகள், களிமண், படிகக்கல், சிலிக்கா போன்ற கனிமப் பொருட்களைப் பூமியிலிருந்து பெற்றுப் பயனடைவதற்கும் நிலவியல் உதவுகின்றது. புவியின் பழங்கால வரலாறுகளை உய்த்துணரவும் இத்துறை வழிவகை செய்கின்றது.

                                     

1.2. பூமி புவியியல் பரிமாணங்கள்

கால ஓட்டத்தில் பாறை அலகுகள் படியவைக்கப்படுதலாலும், ஆங்காங்கே செருகப்படுவதாலும் உருமாற்ற செயல்முறைகளாலும் ஓரிடத்தின் நிலவியல் உருவாகிறது.

பாறை அலகுகள் புவியின் மேற்பரப்பில் படிய வைக்கப்படுவதாலும் அல்லது ஊடுறுவுதலாலும் உருவாகின்றன. பூமியின் மேற்பரப்பில் வண்டல் நிலைபெற்றபோது இப்படிவுகள் தோன்றியிருக்கலாம். பின்னர் இவை கெட்டியாகி படிவுப்பாறையாக உருப்பெற்றிருக்கலாம். எரிமலைச் சாம்பல் அல்லது எரிமலைக் குழம்பு போன்ற எரிமலைப் பொருட்கள் மேற்பரப்பில் போர்வைபோல மூடி தீப்பாறை நுழைவுகளாக நீள்வரிப்பாறை, உள்செதுக்குப்பாறை அல்லது கும்மட்டப்பாறை போன்றவை மேற்படிந்து படிகமாகின்றன.

பாறைகள் படிவுக்குபின் தொடக்கத்தில் பாறை அலகுகள் உருக்குலைகின்றன அல்லது உருமாறுகின்றன. பொதுவாக கிடைமட்டக் குறைப்பு, கிடைமட்ட நீட்டிப்பு அல்லது பக்கத்திற்குப் பக்க நகர்வு போன்ற செயல்களால் உருச்சிதைவு ஏற்படுகிறது. கண்டத்திட்டுகளுக்கு இடையில் காணப்படும் குறுகும் எல்லைகள், மாறுபடும் எல்லைகள், விரியும் எல்லைகள் போன்றவை கட்டமைப்பு காலத்துடன் பரவலாகத் தொடர்பு கொண்டுள்ளன.                                     

1.3. பூமி வரலாற்று அணுகுமுறை

புவியின் வரலாறு என்பது புவி என்ற கோளின் அடிப்படை வளர்ச்சி நிலைகளைப் பற்றியும் ஆரம்பகாலத்திலிருந்து இன்றுவரை தோன்றிய விதம்பற்றியும் குறிப்பதாகும். இயற்கை விஞ்ஞானத்தின் எல்லா துறைகளும் புவியினைப் பற்றி படிப்பதற்கு உதவுகின்றன. சுமார் 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் சூரியக் குழம்பிலிருந்து சூரியனும் பிற கோள்களும் உருவானதாக கருதப்படுகிறது. 20 மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர் சந்திரன் தோன்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. சூரிய ஒண்மீன் படலத்திலிருந்து பிரிந்து அடர்வளர்ச்சியின் பயனாக பூமி உருவானது. தொடக்கத்தில் எரிமலை வாயுவால் காற்றுமண்டலம் உருவானது, ஆனால் அதில் உயிர்வாழத்தேவையான பிராணவாயு இல்லாமல் நச்சு வாயுக்களைக் கொண்டதாகயிருந்தது. பெரும் எரிமலைச் சிதறலாலும், பிற அண்டவெளிப் பொருட்களீன் தொடர்,மோதல்களாலும் புவியின் பெரும்பகுதி உருகிய நிலையிலேயே இருந்தது. இத்தகைய தொடர் மோதல்களின் விளைவால்தான் சந்திரன் உருவானதாகவும், புவி சற்று சாய்ந்த நிலையில் மாறியதாகவும் கருதப்படுகிறது. முதலில் உருகிய நிலையிலிருந்த பூமியின் வெளியடுக்கு குளிர்ந்து அதன் விளைவால் திடமான மேலோடு தோன்றியது. கோள்கள் வெளியேற்றும் வளிமம் மற்றும் எரிமலை நடவடிக்கைகளினால் அடிப்படை வளிமண்டலம் தோன்றியது. வால்நட்சத்திரங்கள் வெளிப்படுத்திய பனிக்கட்டிகள் நாளடைவில் குளிர்ச்சியடைந்து பெருங்கடல்களும் பிற தண்ணிர் மூலங்களும் உருவாகின. 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உயர் ஆற்றல்மிகுந்த தன் இனப்பெருக்க மூலக்கூறுகள் உருவாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

நூற்றுக்கணக்கான, மில்லியன் கணக்கான ஆண்டுகளாக உருவான இக்கண்டங்கள் உடைந்தும் மறு உருவாக்கமடைந்தும் வருகின்றன. இவை இணைந்து பூமியில் ஒரு மாகண்டமாக உருவாகும் போக்கும் எப்போதாவது நிகழ்கிறது. 750 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் முன்னதாக அறியப்பட்ட ரோதினா என்ற மாகண்டம் உடைந்து தனித்துப்போனதாக கூறப்படுகிறது. உடைந்த கண்டங்கள் பிற்காலத்தில் மீண்டும் இணைந்து பண்ணோட்டியா என்ற மாகண்டமாக உருவாகியதாகவும் இக்கண்டம் மீண்டும் 540 மில்லியன் ஆண்டுகளுக்குமுன் உடைந்தது என்றும் கூறப்படுகிறது. இறுதியாக 180 ஆண்டுகளுக்கு முன்னர் பாங்காயெ எனப்படும் ஒருநிலப்பகுதி உடைந்ததாக நம்பப்படுகிறது. நியோபுரோட்டெரோசோயிக் காலத்தில், பனிப்பாறைகள் மற்றும் பனித்தகடுகளால் பூமி மூடப்பட்டிருந்ததாக அறியப்படுகிறது. இந்தக் கருதுகோள் பூமியை "பனிப்பந்து பூமி" என அழைக்க வைத்தது. பல செல் உயிரினங்கள் இப்பனிபந்து பூமியில் 530-540 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய கேம்பிரியக் காலத்தில் தோன்றியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. கடினவுடல் உயிரினங்களின் தொல்லுயிர் எச்சங்கள் கேம்பியக் காலத்தில் திடீரென தோன்றியமையால் இந்நிகழ்வு ”கேம்பிரிய வெடிப்பு” எனப்படுகிறது. இக்கேம்ப்ரிய வெடிப்புக் காலத்தில் முற்றிலும் அடையாளம் காணக்கூடிய ஐந்து பேரழிவுகள் ஏற்பட்டுள்ளன. கடைசியாக 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு விண்கல் மோதல் ஏற்பட்டு பறக்கும் சக்தியற்ற டைனோசர்களும் மிகப்பெரிய ஊர்வன விலங்குகளும் அழிந்து ஒரு பேரழிவு நிகழ்ந்திருப்பதாக அறியப்படுகிறது. இப்பேரழிவில் பாலூட்டிகள் போன்ற சிரிய உயிர்னங்கள் தப்பிப் பிழைத்து இத்தனை ஆண்டுகளாக விரிவடைந்து வளர்ந்துள்ளன எனப்படுகிறது.

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, சிறிய ஆப்பிரிக்க குரங்கு இனங்கள் நிமிர்ந்து நிற்க ஆரம்பித்தன.அடுத்தடுத்த மனித வாழ்வின் வருகையும் விவசாயத்தின் வளர்ச்சியும் தொடர்ந்தன. நாகரிகம் என்ற பெயரில் மனிதர்கள் மிகவும் வேகமாக பூமியின் இயற்கையை, இதன் காலநிலையை பாதிக்கத் தொடங்கினர். பிற உயிரினங்கள் வாழ்விலும் மனிதர்களின் ஆதிக்கம் அதிகரித்து அவையும் குறையத் தொடங்கின. ஒப்பீட்டில், சுமார் 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மிகப்பெரிய ஆக்சிசனேற்ற நிகழ்வு, சிடெரியன் காலத்தில் பாசி பெருக்கத்தால் உச்சமடைந்திருந்தது.

தற்போதைய சகாப்தம் ஒரு வெகுசன அழிவு நிகழ்வான, ஆறாவது அழிவாகக் கருதப்படும் ஒலோசீன் அழிவு நிகழ்வில் உருவானதாகும். ஆர்வார்டு பல்கலைகழகத்தைச் சேர்ந்த இ.ஓ.வில்சன் என்பவரின் முன் கணிப்பின்படி அடுத்த நூறாண்டுகளில் மனித நடவடிக்கைகளால் பாதிக்கு மேற்பட்ட உயிரினங்கள் அழிந்து விடும் என்று கருதப்படுகிறது. புவியின் இச்சகாப்தம் குறித்து ஆய்வுகளும், விவாதங்களும் உயிரியலாளர்கள் மத்தியில் நிகழ்ந்த வண்ணம் உள்ளது

.

                                     

2. வளிமண்டலம், வெப்பம் மற்றும் காலநிலை

பூமியின் வளிமண்டலம் சுற்றுச்சூழலை நிலைநிறுத்திக் கொள்வதற்கு ஒரு முக்கிய காரணியாக உள்ளது. வளிமங்களால் ஆன மெல்லிய அடுக்கு புவியீர்ப்பு விசையால் பூமியை ஒரு போர்வை போல சூழ்ந்துள்ளது. நைட்ரசன், ஆக்சிசன், நீராவி, மிகச்சிறிதளவு கார்பனீராக்சைடு, ஆர்கான் வாயுக்கள் காற்றில் சேர்ந்துள்ளன. வளிமண்டல அழுத்தம் உயரத்திற்கேற்ப மாறுபடுகிறது. சூரியக் கதிர்வீச்சிலிருக்கும் புறஊதாக் கதிர்களை உறிஞ்சிக் கொள்வதன் மூலமும், பகல், இரவு நேரங்களுக்கு இடையேயான வெப்பநிலை வேறுபாடுகளைக் குறைப்பதன் மூலமும் வளிமண்டலம் பூமியில் உயிர் வாழ்வைக் காத்து வருகிறது.

புவிக்குரிய வானிலை பிரத்தியேகமாக மண்டலத்தின் கீழ் பகுதியில் ஏற்படுகிறது, வெப்ப மறு வழங்கலுக்காண வெப்பச்சலன அமைப்பாகவும் இது பணியாற்றுகிறது. பெருங்கடல்களின் நீரோட்டமும் காலநிலையை உறுதிப்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கின்றன. குறிப்பாக வெப்ப ஆற்றலை பூமத்திய கடல்களில் இருந்து துருவப் பிரதேசங்களுக்கு பகிர்ந்து அளிப்பதில் கடல் நீரோட்டங்கள் முக்கிய காரணீயாக விளங்குகின்றன. மேலும், இந்த நீரோட்டங்களே மிதவெப்ப மண்டலங்களில் குளிர் மற்றும் கோடை காலங்களுக்கிடையிலான வெப்பநிலை வேறுபாடுகளை மிதமாக்க உதவுகின்றன. இக்கடல் நீரோட்டங்கள் மற்றும் வளிமண்டலத்தால் வெப்ப சக்தி மறுவிநியோகம் நிகழாவிட்டால் வெப்ப மண்டலங்கள் மிகவும் வெப்பமாகவும், துருவப் பிரதேசங்கள் மிகுந்த குளிராகவும் இருக்கும் நிலை ஏற்படும்.

வானிலையால் சாதகமான மற்றும் பாதகமான விளைவுகள் இரண்டும் இருக்க முடியும். வானிலையின் சில உச்ச அளவுகள் அத்தகைய சுழற்காற்று அல்லது சூறாவளிகள், புழுதிப்புயல், புயல் போன்றவை தங்கள் பாதையில் அதிகப்படியான ஆற்றலை வெளியிட்டு பேரழிவை உண்டாக்குகின்றன. புவியின் மேற்பரப்பில் வாழ்கின்ற உயினங்கள் வானிலையின் பருவநிலை மாறுபாடுகளைச் சார்ந்தே வாழவேண்டியுள்ளது. வாமிலையின் திடீர் மாறுபாடுகள் தாவரங்களையும் அவற்றை சார்ந்து வாழ்கின்ற விலங்குகளையும் ஒரு சில ஆண்டுகளுக்கு பாதிக்கின்றன.

வானிலையின் நீண்ட கால போக்குகளின் அளவீடுகள் காலநிலை எனப்படுகிறது. கடல் நீரோட்டங்கள், மேற்பரப்பின் எதிரொளிதிறன, பைங்குடில் வாயுக்கள் போன்ற பல்வேறு காரணிகள் தட்பவெப்ப நிலையை பாதிப்பதாக அறியப்படுகிறது, சூரிய ஒளிர்வின் மாறுபாடுகள் பூமியின் சுற்றுப்பாதையிலும் மாற்றங்களை விளைவிக்கின்றன. பனி யுகங்கள் உட்பட பூமி கடந்த காலங்களில் கடுமையான காலநிலை மாற்றங்களுக்கு, உட்பட்டிருப்பதை வரலாற்று பதிவுகள் மூலம் அறியப்படுகிறது.

ஒரு பகுதியின் காலநிலை, குறிப்பாக தீர்க்கரேகை போன்ற பல்வேறு காரணிகளைச் சார்ந்ததாகும், ஒரு பிராந்தியத்தின் அட்சரேகை பட்டைகள், ஒத்த காலநிலை பண்புகளை கொண்ட நிலப்பகுதிகளை உருவாக்குகிறது. இத்தகைய ஒத்த காலநிலைப் பண்புகள் கொண்ட மண்டலங்கள் உலகின் பல பகுதிகளிலும் காணப்படுகின்றன. நிலநடுக்கோட்டுப் பகுதியில் வெப்ப மண்டலம் தொடங்கி வடக்கு மற்றும் தெற்கு துருவங்களில் துருவக்காலநிலை வரையிலான பல்வேறான மண்டலங்கள் இவற்றில் அடங்கியுள்ளன.

பருவ காலங்களும் வானிலையை பாதிக்கின்றன. கோளப் பாதையிலிருந்து புவியின் அச்சு சிறிதளவு சாய்வதால் இப்பாதிப்புகள் ஏற்படுகின்றன. மேலும், இதனால் கோடை அல்லது குளிர்காலத்தின் போது எந்த நேரத்திலும் சூரியக் கதிர்கள் பூமியின் ஒரு பகுதியின் மீது நேரடியாக விழுகின்றன. பூமியின் இரண்டு அரை கோளங்களும் எதிரெதிர் வகையான காலநிலைகளை சந்திக்கின்றன. நாளுக்கு நாள் புவியின் சராசரி வெப்பநிலை உயர்ந்துவண்ணம் உள்ளதாகவும், பிராந்திய காலநிலைகளில் பல்வேறு மாற்ரங்கள் நிகழ்வதாவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

                                     

3. பூமியில் தண்ணீர்

ஐதரசன் மற்றும் ஆக்சிஜன் சேர்ந்து உருவாகியுள்ள நீர் ஒரு வேதியியல் பொருளாகும். உயிர்ன வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் தண்ணீர் முக்கியப்பங்கு வகிக்கிறது. பரவலாகப் பயன்படுத்தப்படும் நீர்மநிலையில் உள்ள தண்ணீர், திண்மநிலையில் பனிக்கட்டியாகவும், வாயு நிலையில் நீராவியாகவும் பூமியின் மேற்பரப்பில் 71% அளவுக்கு நிரம்பி உள்ளது. பூமியிலுள்ள பெருங்கடல்களிலும் நீர்நிலைகளிலும் அதிக அளவில் காணப்படும் நீர், பூமிக்கு அடியில் 1.6% அளவுக்கு நீரகமாகவும், காற்றில் 0.001% அளவுக்கு நீராவியாகவும், மேகங்களாகவும், படிவுகளாகவும் காணப்படுகிறது. பெருங்கடல்களில் உள்ள நீரின் அளவு 97% ஆகும். ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்களில் 0.6% தண்ணிரும் வெப்ப நீர் ஊற்றுகள், பனிப்பாறைகள், மற்றும் துருவங்களில் 2.4%, நீரும் இவைதவிர உயிர்களின் உடல்களிலும், உற்பத்தி பொருட்களிலும் தண்ணீர் காணப்படுகிறது.

                                     

3.1. பூமியில் தண்ணீர் பெருங்கடல்

பெருங்கடல் என்பது உப்பு நீர் நிரம்பிய ஓர் நீர் நிலை மற்றும் பூமியின் முக்கியமானதொரு கூறும் ஆகும். ஏறத்தாழ 71% புவியானது 361 மில்லியன் சதுர கிலோமீட்டர் தொடர்ச்சியாக அமைந்துள்ள பெருங்கடல்களினால் மூடப்பட்டுள்ளது. இந்நீர் நிலை பல பெருங்கடல்களாகவும், பல சிறிய கடல்களாகவும் பூமியின் மேற்பரப்பில் பிரிந்துகிடக்கிறது. பெருங்கடல்களின் பரப்பளவில் அரைப் பகுதிக்கு மேல் 3.000 மீட்டருக்கு 9.800 அடி மேற்பட்ட ஆழம் கொண்டது ஆகும். கடல்நீரின் சராசரி உப்புத்தன்மை ஆயிரத்தில் 35 பகுதி 35% ஆகும். பொதுவாக முழுக் கடல்நீரும் சராசரியாக ஆயிரத்துக்கு 30 – 38 பகுதிகள் உப்புத்தன்மை கொண்டதாக உள்ளது. பொதுவாக பெருங்கடல்கள் ஒவ்வொன்றும் பல தனி சமுத்திரங்களாகக் கருதப்படுகிறது என்றாலும் அவை அனைத்தையும் ஒன்றாக இணைத்து உலகப் பெருங்கடல் அல்லது உலகளாவிய பெருங்கடல் என்றே பொருள் கொள்ளப்படுகிறது. புவியியல் துறையான கடலியல், பெருங்கடலை தொடர்ச்சியான நீர் நிலைகள் என்றும் அடிப்படை முக்கியத்துவம் மிக்க இவை தங்களின் பகுதிகளை பரிமாறிக் கொள்கின்றன என்றும் கருதுகிறது This concept of a global ocean as a continuous body of water with relatively free interchange among its parts is of fundamental importance to கடலியல். முதன்மையான பெருங்கடல் பிரிவுகள், கண்டங்களாலும், தீவுக் கூட்டங்களாலும், பிற கட்டளை விதிகளாலும் வரையறுக்கப்பட்டுள்ளன.

 • அட்லாண்டிக் பெருங்கடல்
 • பசிபிக் பெருங்கடல்
 • இந்தியப் பெருங்கடல்
 • தெற்குப் பெருங்கடல்.
 • ஆர்க்டிக் பெருங்கடல் இது அட்லாண்டிக் கடலாகக் கொள்ளப்படுவதும் உண்டு


                                     

3.2. பூமியில் தண்ணீர் ஏரிகள்

ஏரி என்பது சுற்றிலும் நிலத்தால் சூழப்பட்ட ஒரு நீர்நிலை ஆகும். லேகசு என்ற இலத்தீன் சொல்லில் இருந்து லேக் என்ற சொல் பெறப்பட்டுள்ளது. கடலின் ஒரு பகுதியாக இல்லாமல் உள் நிலப்பகுதியில் உள்ள நீர் நிலை ஏரி எனப்படுகிறது. பெரும்பாலான ஏரிகள் நன்னீர் ஏரிகள் ஆகும். இவை உலகின் வட அரைக் கோளத்தில் உயர்ந்த பகுதிகளில் உள்ளன. நிலப் பகுதியில் உள்ள பெரிய ஏரிகள் சில நேரங்களில் சிறிய கடல் என்றும் அழைக்கப்படுகின்றன. நிறைய ஏரிகள் செயற்கையாக கட்டப்படுகின்றன. அவை நீர் மின் ஆற்றல் உற்பத்தி செய்வதற்கும் நீர் வினியோகம், மற்றும் பொழுதுபோக்கு இடங்களாக பயன்படுத்தவும் கட்டப்படுகின்றன. குளத்தை விட பெரியனவாகவும் ஆழமாகவும் உள்ள இவ்வேரிகள் ஆற்றில் இருந்தே நீரைப்பெறுகின்றன. பூமியைத்தவிர ஏரிகள் இருப்பது சனி கோளின் நிலவான டைட்டானில் மட்டுமேயாகும்.

                                     

3.3. பூமியில் தண்ணீர் குளங்கள்

இயற்கை அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட தண்ணீர் தேங்கியிருக்கும் நில அமைப்பே குளம் எனப்படுகிரது. குளம் ஏரியைவிட அளவில் சிறியதாகும். தோட்டங்களில் பலவகையான அழகியல் அலங்காரங்களுடன் வெட்டப்படும் குளங்கள், வணிக மீன் இனப்பெருக்கத்திற்காக வடிவமைக்கப்பட்ட மீன் குளங்கள், மற்றும் வெப்ப ஆற்றலை சேமிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சூரிய சக்தி குளங்கள் என பல்வேறு வகையான குளங்கள் மனிதனால் செயற்கையாக உருவாக்கப்படுகின்றன. நீரோட்டங்களின் வேகத்தின் அடிப்படையில் குளங்களும் ஏரிகளும் வேறுபடுத்தப்படுகின்றன. குளங்களில் நுண் நீரோட்டங்களும், ஏரிகளில் மிதமான நீரோட்டமும் பொதுவாகக் காணப்படுகின்றன.

                                     

3.4. பூமியில் தண்ணீர் ஆறுகள்

ஆறு அல்லது நதி என்பது இயற்கையாகச் செல்லும் நன்னீரைக் கொண்ட ஒரு பெரிய நீரோட்டம் ஆகும். ஆறுகள் பொதுவாக மலைப் பகுதிகளில் உற்பத்தியாகின்றன. ஆற்றின் இருபுறமும் உள்ள நிலப்பகுதி ஆற்றங்கரை என அழைக்கப்படுகிறது. ஆறுகள் பொதுவாக மற்றொரு ஆற்றிலோ, ஏரிகளிலோ அல்லது கடலிலோ இணைகின்றன. ஆற்றில் நீரோட்டமானது புவியீர்ப்பு விசையின் காரணமாக ஏற்படுகிறது. சில வேளைகளில் ஆறுகள் இன்னொரு நீர் நிலையை அடைய முன்பே நிலத்துக்குள் உறிஞ்சப்படுவதோ அல்லது வறண்டு விடுவதோ உண்டு. பெரிய நீரோட்டங்கள் ஆறுகள் என்றும், சிறியவை சிற்றாறுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. எனினும் எதனை ஆறு என்று அழைக்கலாம் என்பதற்கான பொது விதி எதுவும் கிடையாது.

                                     

3.5. பூமியில் தண்ணீர் சிற்றோடைகள்

சிற்றோடை Stream என்பது சிறிய அளவில் நீர் வடிந்து செல்லும் படுகை ஆகும். இவை ஆறுகளைவிடச் சிறியவையாகவும் ஆறுகளிலிருந்து பிரிந்து செல்பவையாகவும் உள்ளன. பல சிற்றோடைகள் ஒன்றிணைந்தும் ஆறாக மாறுகின்றன. பொதுவாக நீரோடைகள் மற்றும் நீர்வழிகள் தொடர்பான ஆய்வுகள் பல்துறை இயற்கை அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளுடன் தொடர்பு கொண்டுள்ளன. காடுகளில் மழைக்காலக் கசிவு நீர் சிற்றோடையாக உருவெடுக்கின்றது. பனியும் உருகி சிற்றோடையாக மாறுகிறது. சிற்றோடையைச் சார்ந்து பல்வேறு விலங்கினங்கள், பறவைகள் வாழ்கின்றன. நீர்ச்சுழற்சியில் சிற்றோடைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை நிலத்தடி நீரை அதிகரித்து காடுகளின் செழிப்பிற்கும் அதன் வளத்திற்கும் உதவுகின்றன.

                                     

4. சூழல் மண்டலம்

சூழற்தொகுதி என்பது, ஒரு வரையறுக்கப்பட்ட பகுதியிலுள்ள உயிரற்ற இயற்பியல் கூறுகளுடன் ஒருமித்துச் செயற்படும் உயிருள்ள தாவரங்கள், விலங்குகள், பூஞ்சைகள், நுண்ணுயிர்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய உயிரினங்களையும் இணைத்த ஒர் இயற்கை அலகு சூழலியல் மண்டலம் ஆகும். கட்டமைப்பும் பகுதிக்கூறுகளும் பல்வேறு சுற்றுச்சூழல் காரணிகளால் தீர்மானிக்கப்படுகின்றன. இக் காரணிகளில் நிலவும் வேறுபாடுகள் சூழ்மண்டலத்தில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. மண், வளிமண்டலம், சூரியக்கதிர்வீச்சு, நீர் போன்றவை முக்கிய சில காரணிகளாகும்.

உயிரினங்கள் அவை வாழும் சூழலில் உள்ள பிற கூறுகளுடன் தொடர்ச்சியான தொடர்புகளைப் பேணிவருகின்றன என்ற கருத்தே சூழல் மண்டலம் என்னும் கருத்துருவின் அடிப்படையாகும். சூழல் மண்டலங்களை எண்ணற்ற வழிகளில் வரையறுத்து விளக்க முடியும் என்பதுடன் எங்கெங்கெல்லாம் உயிரினங்களுக்கும் அவற்றின் சூழலுக்கும் இடையே தொடர்பு அல்லது பரிமாற்றம் உள்ளதோ அவற்றையும் சூழல் மண்டல அடிப்படையில் விவரிக்க முடியும் ஒரே சூழல்மண்டலத்தில் உள்ள உயிரினங்கள் யாவும் உணவுச் சங்கிலிக்காக ஒன்றையொன்று சார்ந்தும் ஆற்றலையும் பொருட்களையும் பரிமாறிக் கொள்கின்றன. எடுத்துக்காட்டாக, ஒரு வீடு போன்ற மிகச் சிறிய அலகையோ அல்லது ஒரு முழு நாட்டைப் போன்ற பெரிய அலகையோ எடுத்து அதனை ஒரு மனிதச் சூழ்நிலைமண்டலமாக விளக்க முடியும்.                                     

4.1. சூழல் மண்டலம் அடர்ந்த காட்டுப்பகுதிகள்

மனித செயல்பாடுகளால் கணிசமாக மாற்றமடையாத பூமியின் இயற்கை சூழலில் காணப்படும் காட்டுப்பகுதி அல்லது காட்டு நிலம் அடர்ந்த காட்டுப்பகுதி எனப்படுகிறது. சாலைகள், குழாய்கள், மற்ற தொழில்துறை உள்கட்டமைப்புகளுக்காக முற்றிலும் பாதிப்படையாத, மனிதர்கள் கட்டுப்பாட்டில் இல்லாத இயற்கைப் பகுதிகளும் அடர்ந்த காட்டுப்பகுதியே என்றும் வரையறுக்கப்படுகிறது. பாதுகாக்கப்பட்ட தோட்டங்கள், பண்ணைகள், பாதுகாப்பிலுள்ள தேசிய காடுகள், தேசியப் பூங்காக்கள் போன்ற இடங்களில் அடர்ந்த காட்டுப்பகுதிகளைக் காணலாம், ஆறுகள், கானாறுகள் போன்றவற்றின் உட்புற பாதைகளில், வளர்ச்சியடையாத பின்தங்கிய பிரதேசங்களில் இத்தகைய அடர்ந்த காட்டுப்பகுதிகளைக் காணலாம். அடர்ந்த காட்டுப் பகுதிகளும் பாதுகாக்கப்பட்ட பூங்காக்களும் சில வகையான சுற்றுச்சூழல் ஆய்வுகளுக்கும், பாதுகாப்பிற்காவும், மனமகிழ்ச்சிக்காவும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. அடர்ந்த காட்டுப் பகுதிகளில் மனிதனின் படைப்பாற்றல் திறன் மிகுதியாக இருக்கும் என சில இயற்கை எழுத்தாளர்கள் மிகவும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

                                     

5. உயிர்வாழ்க்கை

உயிர் என்பதற்கான ஒருமித்த வரையறைக்கு உலகளவிலான உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை என்றாலும், அமைப்பு, வளர்சிதை மாற்றம், வளர்ச்சி, தகவமைதல், தூண்டல்களுக்கேற்ற துலங்கல்கள், இனப்பெருக்கம் போன்ற உயிரினச் செயற்பாடுகளை வெளிப்படுத்துவன எல்லாம் உயிரினங்கள் என்று விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்கின்றனர். மிகவும் எளிமையாகச் சொல்ல வேண்டுமெனில் உயிர்வாழ்வனவற்றின் பண்புகள் யாவும் உயிரின் பண்புகளாகக் கருதப்படுகின்றன.

தாவரங்கள், விலங்குகள், பூஞ்சைகள், ஒருசெல் உயிரிகள், பேரின நுண்ணுயிர்கள் மற்றும் பாக்டீரியாக்கள் போன்ற உலக உயிரினங்கள் பொதுவான சில பண்புகளைக் கொண்டுள்ளன. அவை சிக்கலான கட்டமைப்புடன், கார்பன் மற்றும் நீர் சார்ந்த செல்களால் ஆன உயிரினங்களாகும். வளர்சிதை மாற்றம், தூண்டல்களுக்கு ஏற்ப துலங்கும் திறன், இனப்பெருக்கம் போன்ற சிக்கலான செயல்பாடுகளையும் கொண்டுள்ளன. இந்த இயல்புகளுடன் மனிதனால் படைக்கப்பட்ட செயல்பாடுகளையும் வெளிப்படுத்துவதே உயிர் வாழ்க்கையாகும் என்று கருதப்படுகிறது. பூமியின் வெளி ஓட்டில் உள்ள நிலம், மேற்பரப்பு பாறைகள், தண்ணிர், காற்று மற்றும் வளிமண்டலம் உள்ளிட்ட உயிர் தோன்றும் இடங்கள் யாவும் உயிர்க்கோளத்தின் பகுதிகளாகும். இவ்வுயிரனச் செயல்முறைகள் உயிர்க்கோளத்தை திருத்தவோ அல்லது மாற்றவோ முற்படுகின்றன.

உயிர்க்கோளம் என்பது உலகளாவிய சூழலியல் அமைப்பாகும் என்று அகன்ற பொருள் கொண்ட நிலவுடலியல் துறை கருதுகிறது. இச்சூழலியல் கற்கோளம், நீர்க்கோளம், வளிமண்டலம் உள்ளிட்ட கூறுகளையும், வாழும் மனிதர்கள் மற்றும் அவர்களுடைய உறவு முறைகளையும் ஒருங்கிணைக்கிறது. ஒட்டுமொத்த பூமியில் 75 பில்லியன் டன் உயிர்த்திரள் 6.8×1013 வாழ்வதாகவும் அவை உயிர்க்கோளத்தின் பல்வேறு சூழல்களில் வழ்வதாகவும் அறியப்படுகிறது

பூமியின் ஒட்டுமொத்த உயிர்த்தொகுதி பத்தில் ஒன்பது பாகம் தாவரங்கள் இடம்பெற்றுள்ளன. இத்தாவரங்களைச் சார்ந்தே விலங்குகளின் வாழ்க்கையும் நீடிக்கிறது.பூமியில் தற்போதுவரை 2 மில்லியன் இனங்களுக்கு மேற்பட்ட தாவரங்களும் விலங்குகளும் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. எண்ணிக்கைக் கணக்கெடுப்பில் இவற்றின் அளவு 50 மில்லியனுக்கும் அதிகமாக இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.உயிரோடுள்ள தனிப்பட்ட இனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதும் அழிவதுமாக தொடர்கிறது. ஒட்டுமொத்த உயிர்னங்களின் எண்னிக்கை பொதுவாக விரைந்து வீழ்ச்சியின் முகத்திலேயே இருக்கிறது.

                                     

5.1. உயிர்வாழ்க்கை பரிணாமம்

பூமியில் உயிரினங்களின் வாழ்க்கைத் தோற்றம் நன்கு புரிந்து கொள்ளப்படவில்லை, ஆனால் குறைந்தபட்சம் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆடியன் அல்லது ஆர்க்கியன் காலத்தில் தொடக்ககால பூமியின் சுற்றுச்சூழல் கணிசமாக இன்றைய சுற்றுச்சூழலுடன் வேறுபட்டிருந்ததாக கருதப்படுகிறது. இங்கு தோன்றிய உயிரினங்கள் அடிப்படையான தனித்தன்மை பண்புகளையும் தன் நகலாக்கப் பண்புகளையும் கொண்டிருந்தன. ஒரு முறை உயிரினம் தோன்றிவிட்டால் இயற்கைத் தேர்வும் பரிணாமச் செயல்முறையும் அவ்வுயிரினத்தை பல்வேறு வாழ்க்கை வடிவங்களாக வளர்த்துவிடுகின்றன.

மாறிவரும் சூழலுக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொள்ள முடியாத இனங்களும், பிற உயிரினங்களின் போட்டியை எதிர்கொள்ள இயலாத இனங்களும் நாளடைவில் அழிந்து போகின்றன. எனினும், புதைபடிவ பதிவுகள் இந்த பழைய இனங்கள் தொடர்பான பல சான்றுகளை தக்க வைத்துக் கொண்டிருக்கின்றன. தற்போதைய புதைபடிவ மற்றும் டிஎன்ஏ ஆதாரங்களைக் கொண்டு, தற்பொழுது பூமியில் எஞ்சியிருக்கும் இனங்கள் அனைத்திற்குமான தொடர்ச்சியான வம்சாவளியைக் கண்டுபிடிக்க முடியும் என நம்பப்படுகிறது. ஒளிச்சேர்க்கையின் விளைவால் வளிமண்டலத்தில் ஆக்சிசன் அளவு அதிகரித்து ஓசோன் படலம் உருவாகியது. பெரிய செல்களுக்குள் இருந்த சிறிய செல்கள் ஒன்றிணைந்து யுகேரியோட்டுகள் எனப்படும் பல செல் உயிரினங்கள் பெருகின. குறிப்பிட்ட இன கூட்டங்களில் இருந்த செல்கள் தனித்துவம் பெற்று பலசெல் உயிரினங்களாக மாறின. புவியின் மேற்பரப்பை ஓசோன் படலம் புற ஊதா கதிர்வீச்சில் இருந்து காப்பாற்றியது.

                                     

5.2. உயிர்வாழ்க்கை நுண்ணுயிர்கள்

பூமியில் பலசெல் உயிரினங்கள் தோன்றுவதற்கு காரணமான முதல் வடிவம் நுண்ணுயிர்களே ஆகும். பலசெல் உயிரினங்கள் தோன்றுவதற்கு முன், மில்லியன் ஆண்டுகளாக இவை மட்டுமே உயிரினங்களாக பூமியில் இருந்துள்ளன. பொதுவாக நுண்ணுயிரிகள் கண்ணுக்குப் புலப்படாதனவாகவும், நுண்ணோக்கியின் உதவியால் மட்டுமே பார்க்கக் கூடியதாகவும் உள்ள ஒரு செல் உயிரினங்களாகும். பாக்டீரியா, பூஞ்சை, ஆர்க்கியா, புரோடிசுடா போன்றவை சில உதாரணங்களாகும். பூமியில் உள்ள எல்லா இடங்களிலும் நுண்ணுயிரிகள் காணப்படுகின்றன. பூமியின் உட்புறம் உட்பட எங்கெல்லாம் நீர் இருக்கிறதோ அங்கெல்லாம் நுண்ணுயிரிகள் மிகுந்துள்ளன. இவற்றின் இனப்பெருக்கம் விரைவாகவும் மிகுதியாகவும் நிகழ்கின்றன. நேர்கோட்டு மரபணுமாற்றமும் உயர் சடுதிமாற்ற விகிதமும் இணைந்து நுண்ணுயிரிகளை உயர் தகவமைதகு உயிரினங்களாக்குகின்றன. இதனால் இவை விண்வெளி உள்ளிட்ட புதிய சூழல்களிலும் உயிர்பிழைத்து வாழ்கின்றன. புவியின் சூழல்மண்டலத்திற்கு அத்தியாவசியமான உயிரினங்களாக இவை உருவாகின்றன. இவற்றில் சில நுண்ணுயிரிகள் நோயூக்கிகளாகவும், மற்ற உயிரினங்களின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்க வல்லவையாகவும் உள்ளன.

                                     

6. தாவரம் மற்றும் விலங்குகள்

கிரேக்க அறிஞர் அரிசுடாட்டில்384 கி.மு. – 322 கி.மு. எல்லா உயிரினங்களையும், தாவரங்கள் நிலைத்திணை, விலங்குகள் நகர்திணை என இரு பெரும் பிரிவுகளாகப் பிரித்தார். மரம், செடி, கொடி, புற்கள் போன்றவற்றைக் குறிக்கும் ஒரு பெரும் உயிரினப் பிரிவு தாவரவியலாகும். இவ்வகை உயிரினங்கள் ஓரிடத்திலுருந்து மற்றோர் இடத்திற்கு தானே நகராமல் இருப்பதால் இவைகளை நிலைத்திணை உயிரினங்கள் என்பர்.

தாவரங்களைக் கண்டறிதல், வகைப்படுத்தல், பெயரிடுதல் ஆகியனவற்றைப் பற்றி படித்தல் வகைப்பாட்டியல் எனப்படுகிறது. வகைப்பாட்டியலில் பல்வேறு வகைபாடுகள் பலவல்லுநர்களால் விவரிக்கப்பட்டுள்ளன. தாவர வகைப்பாட்டியலின் தந்தையாகக் கருதப்படும் லின்னேயசு அவர்கள் உயிரினங்களை தாவரப் பேரினம் என்றும் விலங்குப் பேரினம் என்றும் இருவகையாகப் பிரித்தார். காலப்போக்கில் பிளாண்ட்டே இராச்சியத்தில் ஆரம்பத்தில் அடக்கப்பட்ட பல வகைகள் தொடர்பற்றவையாக இருப்பது அறியப்பட்டது. பூஞ்சணங்களும், பல வகை பாசிகளும் அல்காக்கள் வெவ்வேறு இராச்சியப் பிரிவுக்கு மாற்றப்பட்டன. இருந்தாலும் இவை பல சூழ்நிலைகளில், தாவரங்களாகவே இன்றளவும் கருதப்பட்டு வருகின்றன. பாக்டீரியாக்களும் சில சமயங்களில் தாவரங்களாகவே கருதப்படுகின்றன. சில வகைப்பாடுகளில் பாக்டீரியா தாவரம் என்று ஒரு தனிவகைப்பாடே வைக்கப்பட்டுள்ளது.

தாவரங்களை வகைப்படுத்தும் பல்வேறு வகையான வழிமுறைகளுடன், ஆய்வின் நோக்கத்தை பொருத்து வகைப்படுத்தப்படும் பிராந்திய தாவர இனங்கள் என்ற வழிமுறையும் ஒன்றாகும். முந்தைய கால தாவர வாழ்க்கையின் எச்சங்களான ஆழ்படிம தாவர இனங்கள் உள்ளிட்டவை இப்பிரிவில் அடங்கும். நாடுகளில் பல பகுதிகளில் காலநிலை மற்றும் நிலப்பரப்பு வித்தியாசங்கள் இருப்பதால் உலகம் முழுவதும் உள்ள தாவர இனங்கள் பரவலாக மாறுபடுகின்றன. இத்தகைய தாவர இனங்களின் தனிப்பட்ட பண்புகளை அப்பகுதி மக்கள் பெருமிதத்துடன் போற்றுகிறார்கள்.

உள்ளூர் தாவர இனங்கள், விவசாயத் தாவர இனங்கள், தோட்டத் தாவர இனங்கள் போன்ற வகைகளாக பிராந்திய தாவர இனங்கள் பிரிக்கப்படுகின்றன. தோட்டத்தாவர இனங்கள் உள்நோக்கத்துடன் வளர்த்து பயிரிடப்படுகின்றன. உள்ளூர் நிலத்திற்குரிய தாவரங்கள்" உண்மையில் ஒரு பகுதி அல்லது கண்டத்திலிருந்து மற்றொன்றுக்கு புலம்பெயர்ந்த மக்களால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட தாவரங்களாகும். நாளடைவில் இத்தாவரங்கள் அப்பகுதிக்குரிய உள்ளுர் தாவரங்களாக மாறிவிட்டன. மனித தொடர்பின் இயல்புகளால் இயற்கையின் எல்லைகள் பாதிக்கப்படுவதற்கு இது ஒரு உதாரணம் ஆகும்.

தாவர வகைப்பாட்டில் மற்றொரு வகைப்பாடு களைகள் எனப்படும் பயன்படாத் தாவரங்களாகும். தாவரவியலாளர்கள் பயனில்லா தாவரங்கள் என்ற சொற்பயன்பாட்டை ஏற்றுக் கொள்வதில்லை. இவற்றை வெட்டி நீக்குவதும் இயற்கைக்கு எதிரான செயலாகவே அவர்கள் நோக்குகின்றனர். இதே போல விலங்குகளும் மனிதர்களுக்கு பயன்படும் விதத்தைக் கொண்டு வீட்டு விலங்குகள், பண்ணை விலங்குகள், காட்டு விலங்குகள், பூச்சிகள் என்று பலவாறாக வகைப்படுத்தப்படுகின்றன.

விலங்குகள் பொதுவாக பிற வாழும் உயிரினங்களில் இருந்து தங்களைத் தனித்துக் காட்டும் பல பண்புகளை கொண்டுள்ளன. இவை யுகேரியோட்டுகளாகவும் பலசெல் விலங்குகளாகவும் உள்ளன, பாக்டீரியா, ஆர்க்கீயாவும், மற்றும் அதிநுண்ணுயிர் தாவரங்களிலிருந்து பிரிந்து வேறுபடுகின்றன. பொதுவாக தாவரங்கள் மற்றும் பாசிகளிலிருந்து விலங்குகள் வேருபடுகின்றன. உள்ளறையில் உணவு செரிக்கும் பண்பு இவற்றை தாவரங்களிடமிருந்து பிரிக்கின்றது. செல் சுவர்கள் இல்லாமலிருப்பதும் ஒரு முக்கியமான தாவர விலங்கு வேறுபாடாகும்.

                                     

7. மனித இடையுறவுகள்

உயிர்கோளத்தில் வாழும் மனிதர்களின் தொகை பிற உயிரினங்களுடன் ஒப்பிடுகையில் குறைவான விகிதத்தில் உள்ளது என்றாலும் இவர்களால் இயற்கைக்கு ஏற்படும் பாதிப்புகள் ஏராளமாகும். ஏனெனில் மனித தலையீடுகளுக்கு எல்லைகளில்லை. இயற்கையின் எல்லைக்கும் மனிதர்களால் உருவாக்கப்படும் செயற்கைக்கும் திட்டவட்டமான எல்லைகள் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. எனவே உச்சகட்ட வேகத்தில் இயற்கையின் இயல்புகள் மனித தலையீட்டால் அழிந்துவருகின்றன.

மனிதகுலத்தின் வேகமான தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் இயற்கை வளங்கள் அதிகமாக சுரண்டப்பட்டன. அதேசமயம் இவ்வளர்ச்சி இயற்கை இடையூறுகளினால் ஏற்படும் சில ஆபத்துகளை போக்கவும் உதவியது. இத்தகைய முன்னேற்றங்கள் இருந்தபோதும், மனித நாகரிகத்தின் விதியானது சுற்றுச்சூழல் மாற்றங்களுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டதாகவே இருக்கிறது. தொழில்நுட்பத்தின் மேம்பட்ட முன்னேற்றத்திற்கும் சூழ்நிலை மாற்றங்களுக்கும் இடையிலான உறவுகள் மெல்ல மெல்லவே புரிந்துகொள்ளப்பட்டு வருகிறது. சூழ்நிலை மாசு, காடுகள் அழிப்பு, எண்ணெய் சிதறல் போன்ற கேடுகள் மனிதர்களால் இயற்கைக்கு எதிராக செய்யப்படும் சில அச்சுறுத்தல்களாகும். மேலும் மனித குலம் பல்வேறு தாவரங்களையும் விலங்குகளையும் அழித்து விட்டது என்பது மிகப்பெரும் உண்மையாகும்.

மனிதர்கள் ஓய்வு மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் இரண்டுக்காகவும் இயற்கையைப் பயன்படுத்துகின்றனர். தொழில்துறைக்காக இயற்கை வளங்களை கையகப்படுத்துதல் உலகப் பொருளாதார அமைப்பின் பெருகிவரும் கூறாக உள்ளது. பெரும்பாலான மக்கள் வேட்டையாடவும், வாழ்வாதரத்திற்காகவும் உயினங்களை அழித்துவருகின்றனர். உணவுக்காகவும் ஆற்றலுக்காகவும் விவசாயம் முக்கியமான தொழிலாக உலகெங்கும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. பொதுவாக இயற்கையின் தலையீட்டைச் சார்ந்தே வளம் செழிக்கிறது.

ஆதி மனிதர்கள் உணவுக்காக சாகுபடி செய்யப்படாத தாவரப் பொருட்களை உபயோகித்தனர். காயங்களை ஆற்ற தாவரங்களின் மருத்துவ குணங்களைப் பயன்படுத்தினர். விவசாயத்தின் மூலம் பெறப்பட்ட தாவரங்களைப் பயன்படுத்துவது மட்டுமே இக்கால நாகரீகப் பயன்பாடாக மாறியுள்ளது. பயிர் வளர்ச்சிக்காக பரந்தளவிலான நிலங்களை சுத்தம் செய்வதன் மூலமாக பல தாவர மற்றும் விலங்கினங்களுக்கான வாழ்விட இழப்பு அதிகரிக்கிறது. மண் அரிப்புக்கும் கணிசமான வழிவகுக்கிறது.

                                     

7.1. மனித இடையுறவுகள் அழகும் அழகியலும்

இயற்கையில் அழகு என்பது வரலாற்று நூலகங்கள் மற்றும் புத்தகக் கடைகளில் கலை அம்சம் நிறைந்த முக்கியப் பிரிவாகவும் ஒரு பொது நடைமுறை கருத்தாகவும் இருந்துவருகின்றது. இயற்கையின் அழகு புகைப்படக் கலைஞர்களால் போற்றப்படுகிறது. ஓவியர்களால் வரையப்படுகிறது. கவிஞர்களால் எழுதப்படுகிறது. பல்வேறு வகை இலக்கியங்களால் இயற்கையின் வலிமை சித்தரிக்கப்படுகிறது. இவ்வாறு கலை, புகைப்படம், கவிதை என இயற்கை அழகு மக்களால் கொண்டாடப்படுகிறது, ஏன் இயற்கை இவ்வாறு கொண்டாடப்படுகிறது என்பதை அழகியல் தத்துவம் ஆய்வு செய்கிறது. குறிப்பிட்ட சில அடிப்படை பண்புகளுக்கு அப்பால், இயற்கையிடம் ஏற்படும் ஈர்ப்பிற்கு சொல்லப்படும் காரணங்கள் முடிவில்லாதவையாக உள்ளன என்பதை பல்வேறு தத்துவ அறிஞர்களும் ஒப்புக்கொள்கின்றனர்.இயற்கையும் காட்டுயிர்களும் உலக வரலாற்றின் பல்வேறு காலங்களிலும் முக்கியத்துவம் பெற்று வந்துள்ளன. இயற்கை கலையின் ஆரம்பகால பாரம்பரியம் டாங் வம்சத்தில் துவங்கியதாக அறியப்படுகிறது. இயற்கையின் மேன்மையை குறிப்பது சீன ஓவியத்தின் நோக்கங்களில் ஒன்றாக இருந்தது ஆசிய ஓவியத்திலும் இக்கலை முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

                                     

8. பருப்பொருளும் ஆற்றலும்

அறிவியல் புரிந்து கொள்ள முயலும் இயற்கையின் சில விதிகளுக்கு கீழ்படிந்து இயங்கும் பொருளே இயற்கையாகும் என்று அறிவியலின் சிலதுறைகள் கருதுகின்றன. இந்த காரணத்திற்காகவே மிகவும் அடிப்படையான அறிவியல் பிரிவு பொதுவாக "இயற்பியல்" என்று புரிந்து கொள்ளப்படுகிறது. இயற்கையைப் பற்றி அறிந்து கொள்ள முயலும் அறிவியல் இயற்பியல் என்று பொருள் கொள்ளப்படுகிறது.

இயற்பியல் பொருள்கள் எதனால் ஆக்கப்பட்டுள்ளனோவோ அவை பரு பொருட்கள் என வரையறுக்கப்படுகின்றன. இப்பருப்பொருட்கள் பிரபஞ்சத்தினுடைய காண்பதற்குரிய அண்டத்தில் உள்ளன. பிரபஞ்சத்தின் காணக்கூடிய பகுதிகள் மொத்த நிறையில் 4.9 சதவீதம் மட்டுமே ஆகும். ஏனையவை 26.8 சதவீதம் குளிர் கரும் பொருள் மற்றும் 68.3 சதவீதம் கருப்பு ஆற்றல் ஆகும். இந்த கூறுகளின் சரியான வரிசைமுறை இன்னமும் அறியப்படாமல் உள்ளன இயற்பியலாளர்கள் பலமாக இவ்வரிசை முறைகள் குறித்து ஆய்ந்து வருகின்றனர்.

பிரபஞ்சத்தின் காணக்கூடிய அண்டம் முழுவதும் பருப்பொருள் மற்றும் ஆற்றல் ஆகிய குணங்கள் யாவும் நன்கு வரையறுக்கப்பட்ட இயற்பியல் விதிகளைப் பின்பற்றுவது போலத் தோன்றுகிறது. இவ்விதிகளைக் கொண்டு அண்டவியல் மாதிரிகளை உருவாக்கவும் வெற்ரிகரமாக அவற்றின் கட்டமைப்புகளைப் பற்றி விளக்கவும், நாம் காணக்கூடிய அண்டத்திவ் பரிணாம வளர்ச்சியை அறியவும் முடியும். இயற்பியலின் கணக்கீட்டு முறைகள் 20 இயற்பியல் மாறிலிகளைப் இதற்காகப் பயன்படுத்துகின்றன. பிரபஞ்சம் முழுவதும் இம்மாறிலிகளின் மதிப்பு நிலையாக உள்ளது. ஆனால் இச்சிறப்பு மதிப்புகளுக்கான காரணம் புரியாத புதிராகவே உள்ளது.

                                     

9. பூமிக்கு அப்பால்

விண்வெளி அல்லது புறவெளி என்பது ஒப்பீட்டளவில் பிரபஞ்சத்தில் வெறுமனே காலியாக உள்ள இடங்களைக் குறிக்கிறது. விண்வெளியில் உள்ள வானுலகப் பொருட்களின் வளிமண்டலத்திற்கு வெளியே உள்ள காலியிடம் யாவும் விண்வெளி எனப்படும். பிராந்தியப் பகுதிகளின் வான்வெளியை விண்வெளி வேறுபடுத்திக் காட்டுகிறது. புவியின் வளிமண்டலத்திற்கும் விண்வெளிக்கும் இடையில் எந்தவிதமான தனித்தியங்கும் எல்லையும் கிடையாது. படிப்படியாக உயரம் அதிகரிக்கையில் வளிமண்டலத்தின் எல்லை குறைகிறது. சூரிய மண்டலத்திற்குள் உள்ள கோள்களிடை விண்வெளியில் செல்லும், விண்மீன்களிடை ஊடகம் சூரியன்சூழ் மண்டலம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.

விண்வெளியில் அடர்த்தி குறைவான பல வகையான கரிமப்பொருட்கள் நிரம்பியிருப்பது நுண்ணலை நிறப்பிரிகை முறையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரபஞ்சம் மற்றும் அண்டக்கதிரின் தோற்றத்திற்குக் காரணமான பெருவெடிப்புக்கு பின் எஞ்சியுள்ள கரும்பொருள் கதிர்வீச்சில் பல்வேறு அணுப்பொருட்கள் அயனியாக்க உட்கருக்கள். சிறிதளவு வளிமம், பிளாசுமா, தூசி, எரிகற்கள் உள்ளிட்ட பொருட்கள் காணப்படுகின்றன. கூடுதலாக விண்வெளியில் மனித வாழ்விற்குரிய அறிகுறிகள் தென்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இவை தவிர விண்வெளிக்குச் செலுத்தப்பட்ட ஆளேற்றி மற்றும் ஆளில்லா ஏவுகலன்கள் விண்வெளியில் நிரம்பி குப்பையாகச் சேர்ந்து வருகின்றன.

சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களில் பூமியில் மட்டுமே உயிர் வாழ்வதற்குரிய சூழல் நிலவுகிறது என்றாலும், தொலை தூரத்தில் இருக்கின்ற செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் நீர் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. செவ்வாய் கிரகத்தின் வரலாற்றில் உயிர் வாழ்வதற்கான சாத்தியங்கள் உருவாகலாம் என்று நம்பப்படுகிறது. தற்பொழுது அங்குள்ள தண்ணிர் முழுவதும் உறை நிலையில் காணப்படுகிறது. நிலத்தடியில் திரவநிலையில் தண்ணீர் உள்ள பகுதியில் ஒருவேளை உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியங்கள் இருப்பதாக கருதப்படுகிறது. மற்ற திட கிரகங்களான புதன் மற்றும் வெள்ளியில் உயிர் வாழ்க்கைக்கான சாத்தியங்கள் ஏதுமில்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததேயாகும். ஆனால் வியாழன் கோளின் நான்காவது மிகப்பெரும் சந்திரன் யூரோபாவின் துணை மேற்பரப்பில் கடல் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. பூமியுடன் ஒப்புமையுள்ள கோள்களை விண்வெளி அறிஞர்கள் மற்றும் நிறுவனங்கள் நட்சத்திர மண்டலங்களில் ஆய்ந்து வருகின்றனர் என்பதும் நாம் அறிந்ததே.

                                     

10. புற இணைப்புகள்

 • The National Geographic Society nationalgeographic.com
 • BBC – Science and Nature bbc.co.uk
 • The Wild Foundation – The heart of the global wilderness conservation movement wild.org*
 • European Wildlife is a Pan-European non-profit organization dedicated to nature preservation and environmental protection eurowildlife.org
 • Science.gov – Environment & Environmental Quality.
 • Nature Journal nature.com
 • Encyclopedia of Life eol.org.
 • Science Daily sciencedaily.com
 • Natural History Museum.nhm.ac.uk
 • European Commission – Nature and Biodiversity ec.europa.eu
 • PBS – Science and Nature pbs.org
 • Fauna & Flora International is taking decisive action to help save the world’s wild species and spaces fauna-flora.org
 • The IUCN Red List of Threatened Species iucnredlist.org
 • Record of life on Earth arkive.org
                                     
 • இயற க எர வள அல லத இயற க எர வ ய என பத ந லத தட ய ல இர ந த க ட க க ம ஒர ப த பட வ எர ப ர ள இதன மண வள என ற ம க றல ம இத த ப பற ற எர ய ம
 • இயற க வளங கள natural resources அல லத ப ர ள த ர ர த ய ல ந லம மற ற ம ம லப ப ர ள அல லத கச ச ப ர ட கள எனப பட பவ ஒப ப ட டளவ ல மன தத தல ய ட கள ன ற த
 • மக க ய இயற க உரம உயர யல ப ச ச ந ய மற ற ம கள ந ர வ கம ப ன ற இயற க ச க பட ம ற கள அட ப பட ய க க ண ட ஒர வ ள ண ம வ வச ய ம ற ய க ம இயற க வ ள ண ம
 • இயற க ரப பர அல லத இயற க இறப பர Natural Rubber என பத ச ல வக மரங கள ல இர ந த க டக க க ட ய ப ல ப ப ன ற ஒர ம ள த றன க ண ட ஒர வக த ரவம
 • த ச ய இயற க வரல ற ந தனச ல அல லத த ச ய இயற க வரல ற அர ங க ட ச யகம என பத இலங க ய ன இயற க மரப ர ம பற ற ய வ டயங கள க க ண ட ள ள ந தனச ல ஆக ம இத
 • எண ண ய மற ற ம இயற க எர வ ய க கழகம ONGC ஜ ன 23, 1993 இல ஒர ங க ண க கப பட டத என பத ஒர இந த யப ப த த த ற ப ட ர ல ய ந ற வனம ஆக ம இத ஃப ர ச ச ன
 • இயற க அற வ யல natural sciences என பத இயற க உலகத த நட த த க ன ற பல வ ற வ த கள அற வ யல ச ர ந த ம ற ம கள ல வ ளக க ம ற பட க ன ற அற வ யல ன க ள ஆக ம
 • Conservation of Nature - IUCN உலக ல ள ள இயற க வளத த ப த க ப பதற க க அம க கப பட ட ஒர பன ன ட ட அம ப ப க ம இயற க ம லவளங கள ப ப த க க க ம ந க க ட ச யற பட ட
 • வ ள ண ம ய ல இயற க உரம Manure என பத மண ண ட டப ப ர ள கப பயன பட த தப பட ம உய ர னங கள ல ர ந த க ட க க ம ப ர ள கள க க ற க க ம இவ கர ம ச தனப
 • அம க கப பட ட இயற க எர வள Compressed Natural Gas, CNG, ச என ஜ என பத ப ட ர ல ட சல எல ப ஜ ப ன றவற ற ற க ம ற ற கப பயன பட த தப பட ம ப த பட வ
 • ம ன ன ட க கப பட க ன றன. இயற க அற வ யல ல வக ப பட த தப பட ட ள ள இயற க வரல ற ஆய வ இயற க ப ர ள மற ற ம உய னங கள ன இயல ப க ற த த கல வ ய க ம இயற க வரல ற ற க
 • G. Nammalvar, 6 ஏப ரல 1938 - 30 த சம பர 2013 தம ழ ந ட ட ன ம தன ம இயற க அற வ யல ளர கள ல ஒர வர ஆவ ர இவர தஞ ச வ ர ம வட டம த ர க க ட ட ப பள ள க க
 • த ச ய இயற க வரல ற அர ங க ட ச யகம National Museum of Natural History, NMNH ப த த ல ல இந த ய வ ன இர இயற க அர ங க ட ச யகங கள ல ஒன ற க ம 1972
போர்னியன் நீர் மூஞ்சூறு
                                               

போர்னியன் நீர் மூஞ்சூறு

போர்னியன் நீர் மூஞ்சூறு என்பது சோரிசிடே குடும்பத்தில் உள்ள பாலூட்டிகளின் ஒரு வகை. இது மலேசியாவில் மட்டுமே காணக்கூடிய அகணிய உயிரியாகும். இதன் இயற்கை வாழிடம் ஆறுகள் ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.

சகலவா காணான்கோழி
                                               

சகலவா காணான்கோழி

சகலவா காணான்கோழி பறவை குடும்பத்தில் ஒன்றான ராலிடேவினைச் சார்ந்த ‎ஜாபோர்னியா பேரினத்தில் உள்ள ஓர் சிற்றினம். இது மடகாசுகரில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரியாகும். ஆறு, சதுப்புநிலம், நன்னீர் ஏரிகள் மற்றும் நன்னீர் சதுப்பு நிலங்கள் இதன் இயற்கை வாழிடங்களாகும். இது வாழ்விடம் இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.

சுமத்திரா நீர் மூஞ்சூறு
                                               

சுமத்திரா நீர் மூஞ்சூறு

சுமத்திரா நீர் மூஞ்சூறு என்பது இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ராவின் பதங் மலைப்பகுதிகளில் மட்டுமே காணப்படும் சிவப்பு-பல் கொண்ட மூஞ்சூறு ஆகும். இதன் இயற்கை வாழிடமாக மான்ட்டேன் காடுகளில் உள்ள நீரோடைகள் ஆகும். இந்த இனம் ஒற்றை மாதிரியின் அடிப்படையில் அறியப்பட்டது. அந்த நாதிரியும் சேதப்படுத்தப்பட்டது. மேலும் இது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கத்தின் செம்பட்டியலில் மிக அருகிய இனம் எனப் பட்டியலிடப்பட்டது. வாழ்விட இழப்பால் இது கடுமையாக அச்சுறுத்தப்படுவதாக நம்பப்படுகிறது.

Users also searched:

இயற்கை சீற்றம் தடுக்கும் முறைகள் கட்டுரை, இயற்கை வளங்களை பாதுகாக்கும் முறை, இயற்கை பாதுகாப்பு கட்டுரை, இயற்கை பேரிடர் கட்டுரை,

...
...
...